அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் சென்றார்

முக்கிய பிரமுகர்கள் அமரும் முன்வரிசையில் ஒரு சேர் ரஜினிக்கு ஒதுக்கப்பட்டு, அவர் மட்டும் அழைத்துச் செல்லப்பட்டு அமர வைக்கப்பட்டார்.சற்று தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட தன் குடும்பத்தினரை அங்கிருந்த நிர்வாகி ஒருவரிடம் ரஜினி காட்டி அவர்களையும் தன் அருகில் வர வழிவகுக்கும் படி கேட்டுக் கொண்டார்.
சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த துரை வைகோ
விஜயகாந்த் நல்ல மனதுடைய மனிதர், நல்ல அரசியல்வாதி”

“விஜயகாந்த் உயிருடன் இருக்கும் போதே பலர் அவரை சாமி என்று அழைத்துள்ளனர்” “விஜயகாந்தை முன்னுதாரணமாக வைத்து தான், நடிகர் சங்கத்தில் நாங்கள் செயல்படுகிறோம்” “விஜயகாந்தின் அலுவலகத்தில், எப்போதும் சமையல் நடந்து கொண்டே இருக்கும்” “அனைவரையும் சரிசமமாக பார்த்த ஒரே நடிகர் விஜயகாந்த் தான்”
நடிகர் சங்கத் செயலாளர் விஷால் கோயம்பேட்டில் உள்ள கேப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு
சாலிகிராமத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடல்நலக்குறைவால் காலமான தேசிய முற்போக்கு திராவிடக் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இடத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, தமிழ்நாடு அரசின் சார்பில் அளிக்கப்பட்ட அரசு இறுதி மரியாதை நிகழ்வில் கலந்து கொண்டார்

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, சட்டமன்ற உறுப்பினர்வி.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் உள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவால் காலமான தேசிய முற்போக்கு திராவிடக் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இடத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்
தீவுத்திடல் நோக்கி கேப்டன் உடல் பயணம்
தீவுத்திடல் மைதானத்தில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (28.12.2023) சென்னையில் உடல்நல குறைவால் காலமான தேசிய முற்போக்கு திராவிடக் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்

உடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகரராஜா மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் உள்ளனர்.
பசிப்பிணி போக்கிய மாமனிதர் விஜயகாந்த்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம்

பசிப்பிணி போக்கிய மாமனிதர் விஜயகாந்த் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் செய்துள்ளார். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர். தன்னலமற்ற தலைவர்; தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர்; கொடுத்துச் சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் என்று தெரிவித்தார்.