தாம்பரம் மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம்
நாளை (28.07.2023) காலை 10.00 மணி அளவில் மாண்புமிகு மேயர் திருமதி வசந்தகுமாரி கமலகண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
தாம்பரம் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டரங்கு

தாம்பரம் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டரங்கில் இன்று (2707.2023) தேர்தல் நடத்தும் அதிகாரி/மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நடைபெற்ற வரிவிதிப்பு மேல்முறையீட்டுக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் மாமன்ற உறுப்பினர்கள் எம்.வி.வாணிஸ்ரீ (வார்டு-3), ம.சத்யா (வார்டு-12), ஏ.பிருந்தாதேவி (வார்டு-19), க.மகேஸ்வரி (வார்டு-27), க.மகாலட்சுமி (வார்டு-37), இரா.ராஜா (வார்டு-44), திருமதி ப.லிங்கேஸ்வரி (வார்டு-51), ச.மதுமிதா (வார்டு-58), செ.ரமாதேவி (வார்டு-68) ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிகழ்வில் மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மண்டலக் குழுத்தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உடன் […]
குளோபல் மருத்துவமனையில் வயிற்று புற்று நோய்க்கு நவீன சிகிச்சை மையம்

தாம்பரம்:- கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் தீவிர வயிற்றுப் புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி மையம் திறப்பு தீவிர வயிற்றுப் புற்றுநோய்க்கான தென்னிந்தியாவின் முதல் பிரத்யேக மையத்தை கூடுதல் தலைமை செயலர், சென்னை பெருமாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார் . சென்னையில் முன்னணி பன்னோக்கு மருத்துவமனையாக திகழும் கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் தீவிர வயிற்றுப் புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த […]
தாம்பரம் ரெயில் நிலையத்தில் பேட்டரி காருக்கு கூடுதல் வசூல்

தமிழகத்தின் தென் பகுதியில் இருந்து வரும் தொடர்வண்டிகள் தாம்பரம் இரயில் நிலையத்தில் நிற்கின்றன. மிக நீ……..ண்ட நடைமேடையை முதியவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் எளிதாக கடக்க பேட்டரி கார் இயக்கப்படுகிறது. அந்த காரில் நபர் ஒருவருக்கு பத்து ரூபாய் கட்டணம் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் இருபது ரூபாய் வசூல் செய்கிறார்கள். கேட்டால் போர்டில் பத்து ரூயாய் என்பதை இருபது ரூபாய் என இன்னும் மாற்றி எழுதவில்லை என்கிறார்கள். டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கிறார்கள் என்ற […]
தாம்பரத்தில் காட்டன் சூதாட்டத்தில் மோதல் 3 பேர் கைது

தாம்பரம், ராஜாஜி ரோடு, ஜி.எஸ்.டி.சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்ட காட்டன் லாட்டரி விற்பனையில் ஈடுபடும் நபர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் முத்து என்பவரை கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து 2000 ரூபாய் பணத்தை பறித்து சென்றதாக முத்து என்பவர் தாம்பரம் காவல் நிலையத்தில் செந்தில்குமார், மணிமண்ணன் ஆகியோர் மீது புகார் அளித்தார். அதன் பேரில் தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட காட்டன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரை […]
தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நீரினை சுத்திகரிப்பு செய்வது குறித்து கலந்தாய்வு

தாம்பரம் மாநகராட்சி எல்லைகுட்பட்ட தாம்பரம் சானிடோரியம் பகுதியில் அமைந்துள்ள வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம், வர்த்தகத் துறை கட்டுப்பாட்டில் உள்ள MEPZ Special Economic Zone Devolopment Commissioner தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயர் கோ.காமராஜ் நேரில் சந்தித்து மேற்படி தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நீரினை சுத்திகரிப்பு செய்வது குறித்து கலந்தாய்வு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம்

தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்தூர் மண்டலத்திற்குட்பட்ட வள்ளுவர் குருகுலம் பள்ளியில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமினை தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, (25.07.2023) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்

தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட 38 வது வார்டு பத்மநாப நகர் கருமாரியம்மன் ஆலய கூடத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை தாம்பரம் மாநகராட்சி 38 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரண்யா மதுரை வீரன் பார்வையிட்ட போது எடுத்த படம் அருகில் திமுக நிர்வாகி சி.ஆர் மதுரை வீரன்
பாலவாக்கத்தில் மோடி உருவ பொம்மை எரிக்க முயற்சி
மணிப்பூர் மாநிலத்தில் கிறிஸ்தவ பெண்கள் மீது நடைபெறும் பாலியல் தாக்குதலை கண்டித்தும் குற்றவாளிகள் மீது கடும்மையாக நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தில் பாலவாக்கத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முகமது யூசுப் தலைமை கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைமை நிலைய செயலாளர் ஜைனுல் ஆபிதின், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சோமு, விடுதலைச்சிறுத்தை கட்சி காஞ்சி-விழுப்புரம் மண்டல செயலாளர் சூ.க.செழியன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், இயக்க நிர்வாகிகள் 500 க்கும் […]
திருநங்கைகள் ஒன்று கூடி நடத்திய ஆடித் திருவிழா

தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய பதினாறாம் ஆண்டு ஆடி திருவிழா கடந்த 21 தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான கூழ்வார்க்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனை தலையில் கிரகமாக எடுத்து அப்பகுதியில் ஊர்வலம் கொண்டுவரப்பட்ட திருநங்கைகள் பலர் அம்மனுக்கு அழகு குத்தி வழிபட்டனர். ஊர்வலமாக சென்ற கரகம் பின்பு ஆலயம் வந்தடைந்தது. அங்கு பம்பை உடுக்கை சத்தங்கள் முழங்க திருநங்கை ஒருவர் சாமியாடியது அங்கு […]