TASMAC முறைகேடு – ஆகாஷ் பாஸ்கரனுக்கு உத்தரவு
டாஸ்மாக்கில் ₹1000 கோடி முறைகேடு தொடர்பான வழக்கில், ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்கவும், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கில், இந்த விவகாரம் தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரன் பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது
உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!
உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் பேரிடர் பாதித்த நந்தநகரில் வியாழக்கிழமை அதிகாலை கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்ததில் ஐந்து பேரை காணவில்லை.
போத்தீஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை:
சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள புகழ்பெற்ற போத்தீஸ் ஜவுளிக்கடை நிறுவனத்துக்குச் சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார்கள் தொடர்பாக இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போத்தீஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களான போத்தி ராஜா மற்றும் அசோக் ஆகியோரின் இல்லங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை […]
தமிழகத்தில் 45 மாதத்தில் 6700 கொலை. – எச்.ராஜா
பா.ஜ.க தலைவர் எச்.ராஜா கூறியதாவது :தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. கடந்த 45 மாதங்களில் 6,700 கொலைகள் நடந்துள்ளன. பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருட்கள்பயன்பாடு அதிகரித்துள்ளது. மீண்டும் திமுக அரசு அமைந்தால் அடுத்த தலைமுறை அழிந்து போகும். எனவே, அடுத்த தலைமுறையை காப்பாற்ற திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு அரசியலில் இருந்து விடை கொடுத்து அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நேபாளத்தில் முன்னாள் பிரதமர் மனைவி உயிரோடு எரிப்பு
நேபாளத்தில் முன்னாள் பிரதமர் மனைவி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார் நேபாள தலைநகரில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களின் வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன பாராளுமன்றம் தொலைக்காட்சி உறுப்பினர் பாரக கட்டிடங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன
“வளர்ப்பு நாய்களுக்கு `மைக்ரோ சிப்’ கட்டாயம்”
சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ பொருத்துவது கட்டாயம், சிப் பொருத்தாத நாய் உரிமையாளர்களுக்கு ரூ.3,000 அபராதம்விதிக்கப்படும் சென்னையில் நாய்கள் வளர்க்க புதிய விதிகள்அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது, நாய்களைவெளியே அழைத்து செல்லும்போது வாய்மூடி கட்டாயம் போடப்பட வேண்டும் நாய்கடி சம்பவங்களை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்து உள்ளது
ஹைட்ரஜன் குண்டு:
பிகார் வாக்கு திருட்டு குறித்து வெளியிட்ட தகவல் அணுகுண்டு என்றால் இனிமேல் வரப்போவது ஹைட்ரஜன் குண்டு என ராகுல் கூறினார்
தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி : – மு.க.ஸ்டாலின்
ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில் ரூ.3,819 கோடி மதிப்புள்ள 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளன. இதன்மூலம் 9,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மனி பயணத்தில் மொத்தம் ரூ.7,020 கோடி மதிப்புள்ள 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், 15,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- ஜெர்மனி எப்படி ஐரோப்பிய யூனியனின் முக்கியத் தொழில்துறை நாடாக இருக்கிறதோ, அதேபோல இந்திய ஒன்றியத்தில் தொழில் […]
ஆப்கானிஸ்தான நிலநடுக்கத்தில் பலி 800
கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 800க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 3000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் ஐந்தாவது பெரிய நகரமான ஜலாலாபாத்திலிருந்து 27 கிமீ தொலைவிலும், தலைநகர் காபூலில் இருந்து சுமார் 140 கிமீ தொலைவிலும் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது.
வெளிமாநில தமிழ் சங்கங்களுக்கு இலவச பாடநூல் ரத்து
நாடு முழுவதும் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உட்பட பல நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட தமிழ்ச்சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றில் தமிழ் குடும்பத்தின் குழந்தைகள் தமிழ் வழிக் கல்வி பெறுகின்றனர். சில மாநிலங்களில் தனியாக நிர்வாகிக்கப்படும் தமிழ்வழிக் கல்விக்கான பள்ளிகளும் 12 -ம் வகுப்பு வரை நடைபெறுகின்றன. இவற்றுக்கு 1 முதல் 12 வகுப்புகள் வரை தேவைப்படும் தமிழ்நாட்டு அரசு பாட நூல்கள் இலவசமாகக் கிடைத்து வந்தன. இதன் விநியோகத்தை நடப்பாண்டு முதல் தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. […]