தொழிலாளர்கள்‌ தினத்தை முன்னிட்டு, தாம்பரம்‌ மாநகர திமுக தொழிலாளர்‌ அணி சார்பில்‌,

மாநகர அமைப்பாளர்‌ சிட்லப்பாக்கம்‌ இரா.விஜயகுமார்‌ தலைமையில்‌, இன்று தூய்மை பணியாளர்கள்‌ மற்றும்‌ ஆட்டோடிரைவர்களுக்கு தாம்பரம்‌ எம்‌எல்‌ஏ எஸ்‌.ஆர்‌.ராஜா பல்வேறு நலத்திட்டஉதவிகளை வழங்கினார்‌. அருகே மேயர்‌ வசந்தகுமாரி கமலக்கண்ணன்‌,மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ்‌, எஸ்‌.இந்திரன்‌, பகுதிசெயலாளர்கள்‌செம்பாக்கம்‌ இரா.சுரேஷ்‌, கோட்டி உள்பட பலர்‌ உள்ளனர்‌.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் ஞா.பிரேம்குமாரை ஆதரித்து சிட்லபாக்கம்-செம்பாக்கம் பகுதி 39வது வார்டு காந்திநகர், அம்பாள் நகர் பகுதியில் பகுதி அதிமுக இணைச் செயலாளர் எஸ்.ராஜாத்தி தலைமையில் இரட்டை இலை சின்னத்திற்கு வீடு வீடாக சென்று வாக்கு கேட்டனர்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் ஞா.பிரேம்குமாரை ஆதரித்து சிட்லபாக்கம்-செம்பாக்கம் பகுதி 39வது வார்டு காந்திநகர், அம்பாள் நகர் பகுதியில் பகுதி அதிமுக இணைச் செயலாளர் எஸ்.ராஜாத்தி தலைமையில் இரட்டை இலை சின்னத்திற்கு வீடு வீடாக சென்று வாக்கு கேட்டனர். இதில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள். இதில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் இ.எம்.டேனியல் 39வது வடக்கு வட்டக் செயலாளர் பா.வேதகிரி, வட்ட பொருளாளர் போர்வெல் சுந்தரமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

செம்பாக்கம் தெற்கு பகுதி வார்டு எண் 39,40 உள்ள நல சங்கங்களை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு எம்.பிக்காக உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்தார்

உடன் மண்டலகுழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன், அவைத் தலைவர் ராமச்சந்திரன், பகுதி செயலாளர் சுரேஷ், மாமன்ற உறுப்பினர் கிரிஜா சந்திரன், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் விஜயகுமார், வழக்கறிஞர் ராமானுஜம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செம்பாக்கம் பூங்காவில் 12-7-2023 அன்று நடை பெறுவதாக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் நேர்காணல்இடமாற்ற அறிவிப்பு

வரும் 12-7-2023 புதன் அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை செம்பாக்கம் அன்னை அஞ்சுகம் அம்மையார் பூங்காவில் நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வாழ்நாள் சான்றிதழ் அளிக்கும் முகாம் பூங்கா பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் கீழ்க்கண்ட முகவரியில் உள்ள எனது வீட்டில் அதே நாளில் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறேன். இந்த […]