விற்கப்படாத 5.15 லட்சம் வீடுகள்

இந்தியாவில் 9 முக்கிய நகரங்களில் ஏப்ரல் -ஜூன் காலாண்டில் விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை 5,15,169 ஆக உள்ளதாக பிராப்ஈக்விட்டி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மும்பையின் தானேவில் 1.07 லட்சம் வீடுகளும், மிகக்குறைந்த அளவாக சென்னையில் 19,900 வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன. ஐதராபாத்தில் 99,989, பெங்களுருவில் 52,208, கொல்கத்தாவில் 21,947 வீடுகள் உள்ளன.

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பதிவு கட்டணம் 2 மடங்கு உயர்வு

அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்டப் பதிவாளர்கள் (நிர்வாகம், தணிக்கை) சார்பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அனுப்பியுள்ள கடிதம்: தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு (அப்பார்ட்மெண்ட்) உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து கட்டிட நிறைவு சான்று பெறப்படுகிறது. கட்டுமான நிறுவனங்களால் அடிநிலம் (யுடிஎஸ்) மற்றும் கட்டிடமும் சேர்த்து விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், கிரய ஆவணத்தில் அடிநிலம் மட்டுமே காட்டப்படுகிறது. இனிமேல், கட்டிடநிறைவு சான்று பெறப்பட்ட அப்பார்ட்மெண்ட் வீடுகளை அடிநிலத்துடன் கட்டிடமும் சேர்ந்து விற்பனைஆவணமாக பதிவு செய்ய வேண்டும். […]

நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கும் பணி தொடக்கம்

ஆடிப்பெருக்கையொட்டி அதிகமான ஆவணங்கள் பதிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால் நடவடிக்கை சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளைய பதிவுக்காக வழங்கப்படும் டோக்கன்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

பதிவுத்துறையில் கட்டணங்கள் அதிரடி உயர்வு

தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவு துறையில் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன.இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த20 வருடங்களுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை. எனவே, பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வருகின்ற ஆவண பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல், மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளைப் பொருத்து கட்டண வீதங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பதிவுச்சட்டம், 1908-இன் பிரிவு 78-இல் கட்டண விவர அட்டவணையிலுள்ள 20 இனங்களுக்கான […]