ராகுல் காந்தி அர்பன் நக்சல்பாஜக முதல்வர் தாக்கு
தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி ஓட்டு திருட்டு புகார் கூறி வருகிறார் இதற்கு மராட்டிய முதல் பட்னாவிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் நேபாளத்தில் நடந்தது போல் புதிய தலைமுறை இளைஞர்களை ராகுல் தூண்டிவிடுகிறார் அவர் அர்பன் நக்சல் போல் நடந்து கொள்கிறார் என்று கூறியுள்ளார்
தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தம்: தோ்தல் ஆணையம் முடிவு
தமிழகத்தில் 2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல்களின் அடிப்படையில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. பிகாரைப் போன்று நாடு முழுவதும் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள இந்திய தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் இந்தப் பணிக்காக, 2002-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையிலான வாக்காளா் பட்டியல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.
போதைப்பொருள் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை சேர்த்த டிரம்ப்
சட்ட விரோதமாக போதைப்பொருள் தயாரித்தல் மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகள் பட்டியலை அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார். 23 நாடுகளை கொண்ட அந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவின் பெயரையும் அவர் சேர்த்துள்ளார் .
இவிஎம் எந்திரங்களில் வேட்பாளரின் வண்ண புகைப்படம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இனிமேல் வேட்பாளர்கள் புகைப்படம் வண்ண புகைப்படமாக பயன்படுத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகார் தேர்தலில் இந்த முறையை அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் தினகரனை கூட்டணியில் சேர்க்கவும் எடப்பாடி எதிர்ப்பு
மத்திய மந்திரி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தபோது.சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஆகியோரை அதிமுக கூட்டணியில் கூட சேர்க்க முடியாது” என்று பழனிசாமி பதில் அளித்ததாக கூறப்படுகிறது. பின்னர், “அப்படி எனில், தென் மாவட்டங்களில் அவர்களுக்கு உள்ள வாக்கு வங்கி நமக்கு கிடைக்காமல் போகும். இது திமுக வெற்றிக்கு சாதகமாக அமைந்துவிடுமே. திமுக ஆட்சியை அகற்றும் நோக்கத்துக்கு இந்த முடிவு இடையூறாக இருக்காதா” என்று அமித் ஷா கேட்டுள்ளார். அதற்கு, “அவர்களிடம் சொல்லிக்கொள்ளும்படியாக வாக்கு வங்கி இல்லை.என்று எடப்பாடி […]
வெளிநாட்டு வங்கிகளிடம் இந்தியா ரூ.8 லட்சம் கோடி கடன். -ஆண்டுக்கு வட்டி 45 ஆயிரம் கோடி*
புதுடெல்லி: மோடி தலைமையிலான பாஜ அரசு சர்வதேச வங்கிகளிடம் இருந்து ரூ.8 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது என்றும் இந்த கடன்களுக்கு வருடந்தோறும் மட்டும் ரூ.45,000 கோடி வட்டியாக அரசு செலுத்தி வருகிறது என திரிணாமுல் குற்றம் சாட்டியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: கடந்த 7 ஆண்டுகளில் சர்வதேச வங்கிகளிடம் இருந்து ஒ்ன்றிய அரசு ரூ.8,03,300 கோடி கடன் வாங்கியுள்ளது. இன்று(நேற்று) மோடி பிறந்த நாள். இதையொட்டி மக்களுக்கு பரிசாக […]
பணம் பறிக்க மிரட்டல் – பிரபல யூடுபர்கைது
பணம் பறிக்கும் நோக்கில் மருத்துவ கல்வி கூடுதல் இயக்குநர் தேரணிராஜனை மிரட்டிய யூடியூபர் வராகியை கைது செய்து கீழ்ப்பாக்கம் போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்
ஜிஎஸ்டி மாற்றத்தால் வரும் ரூ.2 லட்சம் கோடி
ஜிஎஸ்டி வரி கடந்த 2017-18-ம் ஆண்டில் ரூ.7.19 லட்சம் கோடியாக இருந்தது. இது 2025-ம் ஆண்டில் ரூ.22.08 லட்சம் கோடியாக உயர்ந்தது. நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை முன்பு 65 லட்சமாக இருந்தது. இது தற்போது 1.51 கோடியாக உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி நுழையும், மக்கள் கையில் பணம் புரளும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
ஓட்டுத் திருட்டு. ராகுல் காந்தி புதிய ஆதாரத்துடன் புகார்
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று ஓட்டு திருட்டு குறித்து புதிய ஆதாரங்களை வெளியிட்டார். கர்நாடக மாநிலத்தில் வேண்டாத ஓட்டுகளை வெளியில் இருந்து இயக்கப்படும் மென்பொருள் மூலம் எப்படி நீக்கி உள்ளனர் என்பதையும் அவர் எடுத்துக் காட்டினார் அவர் நீக்கப்பட்ட வாக்காளர்கள் சிலரை நேரில் அழைத்தும் காண்பித்தார். அவர் பெயரில் உள்ள இணையதளத்தில் மட்டும் இந்த பேட்டியை 60,000 பேர் நேரலையில் பார்த்தனர்.தேர்தல் ஆணையம் மீது மீது நேரடியாகவே ராகுல் காந்தி குன்றம் சாட்டினார்
தவெகவில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம்
தவெகவில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கும் விதமாக 234 தொகுதிகளுக்கும்உறுப்பினர் சேர்க்கை அணியின் பொறுப்பாளர்கள் அறிவிப்பு ’வெற்றி பேரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கைபணிகளை மேற்கொள்ள பொறுப்பாளர்கள் நியமனம்