பெண் போலீசார் லிப்ஸ்டிக் போட தடை
பெண் போலீசார் வேலை நேரத்தில் முகத்தில் மேக்கப், லிப்ஸ்டிக் பவுடர் ஆகியவற்றை போடக்கூடாது என்று பீகார் மாநில காவல்துறை தலைமையகம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. பெண் போலீசார் பணி நேரத்தின் போது சீருடையில் முகத்தில் மேக்கப், லிப்ஸ்டிக், பவுடர் பூசிக்கொண்டும் ‘ரீல்ஸ்’ செய்யும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பணி நேரத்தில் சீருடைகளை முறையாக அணிய வேண்டும். மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் […]
ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள்
ஐஜி பொன் மாணிக்கவேல் ஐஏஎஸ் ,ஐபிஎஸ் அதிகாரிகள் மீது திடீர் குற்றச்சாட்டை வீசியுள்ளார் . அவர் கூறியதாவது:ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் இறங்கி விட்டனர். அவர்களை எதிர்ப்பவர்களை மிரட்ட தொடங்கப்பட்டது தான் போலீஸ் தனிப்படை. சி.எஸ்.ஆர்., நடைமுறையை ஒழித்தால் விசாரணைகள் ஒழியும் என ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் கூறினார்
அஜித்குமாரை அடிக்க உத்தரவிட்ட போலீஸ் அதிகாரி யார்?
பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், ‘எக்ஸ்’ சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் போலீசாரால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்ரவதை செய்யும்படி, போலீஸ் சூப்பிரண்டுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் போலீஸ் துணை சூப்பிரண்டை தொடர்பு கொண்டு காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுவிட்டாலும், தமிழக காவல்துறையை சீர்திருத்த இத்தகைய அதிகாரிகளை அடையாளம் கண்டு தமிழக […]
அஜித்குமார் கொலை:வீடியோ எடுத்த வாலிபருக்கு போலீஸ் பாதுகாப்பு
திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரை தனிப்படை போலீசார் தாக்கும் காட்சியை வீடியோ எடுத்த சக்தீஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்ட போலீசார் பாதுகாப்பு வழங்க கோரி டிஜிபிக்கு ஆன்லைனில் சக்தீஸ்வரன் மனு அளித்திருந்த நிலையில் துப்பாக்கி ஏந்திய 2 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஆள் கடத்தல் வழக்கு .
ஏடிஜிபி சஸ்பெண்ட் உத்தரவு ரத்து சென்னையில் ஆள் கடத்தல் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுபடி ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவரை கைது செய்தனர்.இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது உச்ச நீதிமன்றம் அவரை சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்தது.மாநில அரசு வேண்டுமானால் சஸ்பெண்ட் செய்யலாம் ஆனால் உயர் நீதிமன்றம் ஹஸ்பண்ட் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது
பஸ் மீது மோதல் :சேலையூர் போக்குவரத்து எஸ்ஐ உயிரிழப்பு
சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சிவகுமார் (வயது- 53) இவர் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட சேலையூர் போக்குவரத்து சிறப்பு உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சிவகுமார் பணி முடிந்து இன்று அதிகாலை தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார்,அப்போது ஆலந்தூர் அருகே ஆசர்கான பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்த தனியார் பேருந்தில் பின்னால் எதிபாரதவிதமாக விதமாக […]
ரூ. 1000 லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்கள் நீக்கம்
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பத்திர பதிவு அலுவலக அருகே சிந்தாரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வியாபாரி முஷாமல் முகமது என்பவர் படப்பை அருகே ஒரு இடத்தை வாங்கி பத்திரப்பதிவு செய்வதற்காக தான் கொண்டு வந்த கார் டிக்கியில் 6 லட்சம் ரூபாய் பணத்தை வைத்து விட்டு.பத்திரபதிவு அலுவலகத்திற்குள் சென்று தன் வாங்கிய இடத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தபோது காரின் டிரைவர் கண்ணாடி உடைக்கப்பட்டு காரின் டிக்கி திறக்கப்பட்டு அதிலிருந்து 6 லட்ச ரூபாய் பணத்தை திருடி […]
மலை உச்சியில் மீனம்பாக்கம் போலீஸ்காரர் தற்கொலை
மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் பணி புரியும் முதல் நிலை காவலர் கார்திகேயன்(35), சங்கர்நகர் பகுதியில் உள்ள அவர் வீடு அருகே உள்ள மலை குன்றின் மீது தூக்கு மாட்டி தற்கொலை, குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை என முதற்கட்ட தகவலின் பேரில் சங்கர்நகர் போலீசார் விசாரணை.
சாலையில் கிடந்த ஏகே 47 துப்பாக்கி
சென்னை, ராமாபுரத்தில் சாலையில் கிடந்த ஏகே 47 துப்பாக்கியால் அதிர்ச்சி ஏற்பட்டது.இந்த துப்பாக்கியுடன் 30 தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டன.மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே சாலையில் கிடந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை, சிவராஜ் என்பவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.