ஆளுநர் குற்றச்சாட்டு நியாயமானது -எடப்பாடி பேட்டி
தமிழக சட்டசபையில் இன்று கவர்னர் ரவி தனது உரை படிக்க அனுமதிக்கப்படாத கண்டித்து வெளியேறினார். அவர் சென்றதும் எடப்பாடி தலைமையில் அதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில் ஆளுநர் சொன்ன குற்றச்சாட்டுகள் நியாயமானது தான் தமிழ்நாட்டில் நடப்பதை தான் அவர் கூறுகிறார். ஆனால் ஆளுநர் இவ்வாறு நடந்து கொள்வார் என எதிர்பார்த்து ஸ்டாலின் முன்கூட்டியே அறிக்கை தயாரித்து கொண்டு வந்து வாசிக்கிறார், என குற்றம் சாட்டினார்.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி -புதிய தலைவர் உறுதி
பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராக நிதின் நவீன் இன்று அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். அவர் அளித்த பேட்டியில் தமிழ்நாடு கேரளா மேற்குவங்கம் குறிப்பிட ஐந்து மாநிலங்களிலும் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும். கார்த்திகை தீபத்தை எதிர்ப்பவர்களுக்கும் ராமர் பாலத்தை மறுப்பவர்களுக்கும் அரசியலில் இடமில்லை மரபுகளை தடுக்க முயற்சிக்கும் சக்திகளை எதிர்கொள்வது அவசியம் என்று கூறியுள்ளார்.
சபரிமலை தங்கம் திருட்டு தமிழகத்தில் அமலாக்க பிரிவு சோதனை
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருடப்பட்டதன் மூலம் கிடைத்த சட்டவிரோத வருமானத்தை பணமோசடி செய்திருக்கலாம் என்ற அடிப்படையில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 21 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பெண்ணுடன் உல்லாசம்:கர்நாடகா டிஜிபி சஸ்பெண்ட்
கர்நாடக மாநில போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவ், தனது அலுவலகத்தில் பணியில் இருந்தபோது பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இது சர்ச்சையான நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது கர்நாடக மாநில அரசு. பெண்ணுடன் அவர் இருக்கும் சுமார் மூன்று வீடியோக்கள் ஒரே கிளிப்பாக வெளியானது. இது சமூக வலைதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டது. ஏற்கெனவே, டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளான நடிகை ரன்யா ராவ், தங்கம் கடத்திய […]
தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1.11 லட்சத்தை கடந்தது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,11,200க்கு விற்பனை. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்த நிலையில் மாலையில் மீண்டும் ரூ.2,320 அதிகரித்தது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.340க்கு விற்பனை செய்யப்படுகிறது
மோடி கூட்டத்தில் தினகரன் பங்கேற்பு
23ஆம் தேதி, பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் NDA பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அன்று அதிகாரப்பூர்வமாக இணைகிறார். அந்த கூட்டத்திற்கு அமமுக தொண்டர்களை அழைத்து வருமாறு மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு.
தமிழக காங்கிரசுக்கு புதிய மாவட்ட தலைவர்கள்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் மொத்தம் 71 மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் .டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைமையில் தமிழக காங்கிரசார் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.
வருகிற பிப்ரவரி 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறினர். பெயர் சேர்ப்பதற்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. பெயர் சேர்க்க வரும் 30ம் தேதி வரை அவகாசம் அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை மீண்டும் திறப்பு எப்போது?
சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று இரவு 11 மணி வரையே பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர். நாளை காலை பந்தளராஜ வம்ச பிரதிநிதியின் சிறப்பு வழிபாட்டுக்குப் பிறகு காலை 6.30 மணிக்கு நடைசாத்தப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மகரஜோதி வழிபாடுகள் அனைத்தும் நிறைவு பெறுகின்றன. பின்பு, கும்பம் மாத (மாசி) வழிபாட்டுக்காக பிப்.12-ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படும்.
தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
தென்மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வாகனங்கள் படையெடுத்ததால், செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் நேற்று காலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுதவிர சிங்கப்பெருமாள்கோவில், மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம், பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் ஓஎம்ஆர், ஈசிஆரிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இன்று காலை வரை செங்கல்பட்டு மாவட்ட மற்றும் சென்னை மாநகர போலீஸார் போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.