நடிகரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார்!

லட்டு விவகாரத்தில் எந்தவித தொடர்பும் இல்லாத தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாகவும், இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கும் வகையில் பேசியதாகவும் புகார் மனுவில் தெரிவிப்பு.

தமிழ்நாடு அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

தமிழ்நாட்டில் மீன் பிடிக்க சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதிக் கோரிய வழக்கில் நிபுணர் குழுவின் இறுதி அறிக்கையை அமல்படுத்தாததால் தமிழ்நாடு அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி. சுருக்குமடி வலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கௌரவம் பார்ப்பதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பட்டாசு கடைகள் அமைக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- தமிழக அரசு.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இ-சேவை மையங்களிலும் இதற்காக விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலமாக மட்டுமே உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.

பருவமழையை எதிர்கொள்ள தயாரான சென்னை

சென்னையில் 25 இடங்களில் மெட்ரோ பணிகளால் சேதமடைந்த மழைநீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு மாற்று ஏற்பாடாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சிக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை கொடுத்துள்ளது. பருவமழை தொடங்க உள்ளதால் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை முன்னிட்டு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை முன்னிட்டு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளார். அதில், “முதல் மாநில மாநாடு நடைபெறும் வி.சாலை எனும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம். ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி இல்லை என்பதை மாநாடு மூலம் நாம் நிரூபிப்போம்,”இவ்வாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக்கழகம் மாநாட்டிற்கான பணிகள் விறுவிறுப்பு

மாநாடு நடைபெறும் இடத்தை சமன்படுத்தும் பணி தொடங்கியது 50 அடி உயரம் 800 அடி அகலத்தில் செயின் ஜார்ஜ் கோட்டை போன்ற முகப்பு அமைக்க திட்டம் மாநாட்டு திடலுக்கு மொத்தம் 20 வழிகள்- அதில் 10 உள்ளே வரும் பாதை , 10 வெளியேறும் பாதை 80 ஏக்கர் பரப்பளவு இடத்தில் உள்ள 6 கிணறுகள் மூடப்படுகின்றன.

சென்னையில் தக்காளி விலை இருமடங்காக உயர்ந்துள்ளது

கடந்தவாரம் ரூ.35-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.85-க்கு விற்பனையாகிறது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை உயர்வு என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்லில் போலீசாரிடமிருந்து தப்ப முயன்ற வாலிபருக்கு துப்பாக்கி சூடு

திண்டுக்கல்லில் வாலிபர் இர்பான் கொலை வழக்கில் தொடர்புடைய ரிச்சர்ட் சச்சின் போலீசாரை தாக்கி தப்ப முயன்ற போது தனிப்படை போலீசார் முழங்காலில் சுட்டு பிடித்தனர். படுகாயம் அடைந்த வாலிபர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ரவுடி தாக்கியதில் காவலர் அருண் என்பவர் படுகாயம்

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில்

வரும் 7 – 11ம் தேதி வரை ‘ஒரு தேசம் ஒரு தேர்தல், விக்‌ஷ்த் பாரத்’ போன்ற பாஜகவின் திட்டங்களை மாணவர்களிடையே போட்டியாக நடத்த வேண்டும் என ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் ரஜினிகாந்திற்கு ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஸ்டண்ட் பொருத்தப்பட்டது உடல் நலம் தேறிய நிலையில், நேற்று நள்ளிரவு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.