மும்பை நகருக்குள் மனித வெடிகுண்டுகள் நுழைந்தார்களா?
மனித வெடிகுண்டுகளுடன் 34 வாகனங்கள் தயார் நிலையில் நகருக்குள் நுழைந்துள்ளதாகவும், மும்பையைத் தாக்கி அழிக்கப் போவதாகவும் மிரட்டல்கள் வந்துள்ளன. மகாராஷ்டிர மாநிலம் மும்பை மாநகர போலீஸ் உதவி மையத்துக்கு நேற்று காலை ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகளை நிரப்பிய 34 வாகனங்கள் மும்பை நகருக்குள் நுழைந்து இருப்பதாகவும், அது வெடித்தால் மொத்த மும்பை நகரமும் அழிந்து விடும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும், மும்பை போக்குவரத்து போலீஸாரின் வாட்ஸ்அப் […]
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 150 ஆண்டுகள் வாழலாம்.. புதின் – ஜி ஜின்பிங் உரையாடல்
இதுகுறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் பேசிக்கொண்டது வைரலாகி வருகிறது. சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள தியனன்மென் சதுக்கத்தில் இராணுவ அணிவகுப்புக்கு நடந்து செல்லும்போது இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட உரையாடல் மைக் திடீரென ஆன் ஆனதால் கசிந்தது. அவர்கள் பேசியதாவது, ஜி ஜின்பிங்: கடந்த காலத்தில், மக்கள் 70 வயதைத் தாண்டி வாழ்வது அரிது என்று கூறினோம். ஆனால் இன்று, உங்கள் 70 களில் கூட, (நீங்கள்) இன்னும் ஒரு குழந்தையாகவே இருக்கிறீர்கள். […]
மாணவர்கள் மசாஜ்.தலைமை ஆசிரியை இடமாற்றம்
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பள்ளி வகுப்பறையில் தலைமை ஆசிரியரின் கை, கால்களை மாணவர்கள் மசாஜ் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதையடுத்து, தலைமை ஆசிரியர் வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டு உள்ளார்.
பா.ஜ.க அணியில் இருந்து தினகரன் விலகல்.
அதிமுகவை ஒருங்கிணைக்க அமித்ஷா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி. எனவே, நான் அவர்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறேன் என டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார் ஏற்கனவே சசிகலாவும் ஓபிஎஸ் சும் அதே போலத்தான் பேசி வருகின்றனர். அடுத்து நாளை செங்கோட்டையன்ஊடகர்களைச் சந்திக்க உள்ளார்.
வீட்டு மின் பொருட்கள் மலிவு!
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு 22 முதல் அமுலாகிறத. இதனால் ஏ.சி டி.வி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் – எல்லாம் 28% லிருந்து 18% ஆக குறைக்கப்படுகிறது. இதே போல உரம் விலையும் குறைகிறது.
வீடு கட்டும் நிறுவனங்களுக்கு அரசு எச்சரிக்கை
வீடு, மனை விற்பனை தொடர்பான குறிப்பேடுகள், ஆவணங்களில் தெரிவிக்கப்படும் சலுகைகள் அருகில், மிக சிறிய எழுத்துகளில், ‘நிபந்தனைகளுக்கு உட்பட்டது’ என்ற வாசகம் இடம் பெறுகிறது.இந்த வாசகத்தை தவறாக பயன்படுத்தி, சில நிறுவனங்கள் கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார் வந்துள்ளது. இதன் அடிப்படையில், வீடு, மனை விற்பனையில், எந்த இடத்திலும், ‘நிபந்தனைகளுக்கு உட்பட்டது’ என்ற வாசகம் இடம் பெறக்கூடாது என, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் […]