எடப்பாடிக்கு எதிராக பேசவில்லை – பிரேமலதா
மேல்மருவத்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “என்னுடைய தேமுதிக சார்பில் நடைபெறும் “உள்ளம் தேடி இல்லம் நாடி” என்ற முதல் சுற்றுப்பயணம் வெற்றிகரமாகவும் மக்களுடைய ஆதரவோடும் மிக சிறப்பாக நடைபெற்றது. மீண்டும் இரண்டாம் கட்ட பயணம் வருகின்ற ஐந்தாம் தேதி தொடங்கி செப்டம்பர் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது எங்கு சென்றாலும் மக்கள் மிகச் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள். நான் பலமுறை எங்கள் கட்சி கூட்டணி குறித்து கூறிவிட்டேன் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணியை […]
“வளர்ப்பு நாய்களுக்கு `மைக்ரோ சிப்’ கட்டாயம்”
சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ பொருத்துவது கட்டாயம், சிப் பொருத்தாத நாய் உரிமையாளர்களுக்கு ரூ.3,000 அபராதம்விதிக்கப்படும் சென்னையில் நாய்கள் வளர்க்க புதிய விதிகள்அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது, நாய்களைவெளியே அழைத்து செல்லும்போது வாய்மூடி கட்டாயம் போடப்பட வேண்டும் நாய்கடி சம்பவங்களை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்து உள்ளது
9 நாளில் பவுன் விலை ரூ 4000 அதிகரிப்பு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.78 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.78,440-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.80 உயர்ந்து ரூ.9,805-க்கு விற்பனையானது. தங்கம் விலையை பொறுத்தவரை கடந்த மாதம் 25-ம் தேதி முதல் செப்.3-ம் தேதி வரை 9 நாட்களில் பவுனுக்கு ரூ.4,000 வரை உயர்ந்துள்ளது.
பா.ஜ.க அணியில் இருந்து தினகரன் விலகல்.
அதிமுகவை ஒருங்கிணைக்க அமித்ஷா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி. எனவே, நான் அவர்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறேன் என டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார் ஏற்கனவே சசிகலாவும் ஓபிஎஸ் சும் அதே போலத்தான் பேசி வருகின்றனர். அடுத்து நாளை செங்கோட்டையன்ஊடகர்களைச் சந்திக்க உள்ளார்.
யாழ்ப்பாணம் செம்மணியில் 200 எலும்புக் கூடு கண்டெடுப்பு
இலங்கையில் உள்நாட்டு போர் நடந்த யாழ்ப்பாணம் மாவட்டம், செம்மணி சிந்துப்பாத்தியில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் நடந்த அகழாய்வில் 200-க்கும் மேற்பட்ட எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் சிறுவர்களின் எலும்புக் கூடுகள் அதிகம் கிடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உணவில் கரப்பான் பூச்சி:
சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், தூத்துக் குடி மாவட்டம், ட்டம், கோவில்பட்டி யைச் சேர்ந்தவர் வக்கீல் அபிநயா முத்து (வயது 29) என்பவர் தாக்கல் செய்துள்ள வழக்கில், “2024-ம் ஆண்டு’சுவிக்கி’ மூலம் அஞ்சப்பர் ஓட்டலில், அசைவ சாப்பாடு வாங்கினேன். சாப்பிடும்போது, இறந்தநிலையில் ‘கரப்பான் பூச்சி’ கிடந்ததை கண்டு அதிர்ச்சி தப்பட்ட ஓட்டலுக்கு, புகைப் அடைந்தேன். இதுகுறித்து, சம்பந் படத்துடன் புகார் அளித்தேன். இதற்கு உரிய விளக்கம் அளிக்க வில்லை. இந்த உணவை சாப்பிட் டதால், லேசான […]
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி’
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில், வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் செப்.7ம் தேதி வரை தமிழகத்தில் மிதமானமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிவித்து உள்ளது
தெரு நாய்கள்: உச்சநீதிமன்ற கட்டுப்பாடுகள் தளர்வு
டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை என தனது முந்தைய உத்தரவில் இருந்த கெடுபிடிகள் சிலவற்றை தளர்த்தி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம். அதன்படி, “டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் பிடித்து காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை. அவற்றைப் பிடித்து கருத்தடை சிகிச்சை செய்து, புழுக்கள் நீக்க மாத்திரைகள் கொடுத்துவிட்டு அவை எங்கே பிடிக்கப்பட்டனவோ அங்கேயே விட்டுவிடலாம். அதேவேளையில், ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய்கள், ஆக்ரோஷமான தன்மையோடு இருக்கும் நாய்களை காப்பகங்களில் பராமரிக்க […]
சென்னையில் வளர்ப்பு நாய் கடித்து ஒருவர் பலி
கிண்டியை அடுத்த ஜாபர்கான் பேட்டையில் வசிப்பவர் கருணாகரன் .அவர் தனது வீட்டில் உட்கார்ந்து இருந்தபோது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பூங்கொடி என்பவர் தனது பிட்புல் வளர்ப்பு நாயை அழைத்து வந்தார் அந்த நாய் திடீரென கருணாகரன் மீது பாய்ந்து கடித்து குதறியது .இதில் படுகாயம் அடைந்த கருணாகரன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு உயிரிழந்தார் நாயை தடுக்க முயன்ற பூங்கொடியும் நாய் கடித்து படுகாயம் அடைந்தார்
மும்பை மலையில் மூழ்கிய கார் -பயணிகள் மீட்பு
மும்பை தானே நகரில் கனமழையால் சுரங்கப் பாதையில் தேங்கிய வெள்ளத்தில் கார் மூழ்கியது; உள்ளூர்வாசிகள் சிலர் உடனே நீரில் குதித்து காரை நோக்கி நீந்திச் சென்று கார் கதவுகளை திறந்து காரில் சிக்கியவர்களையும், காரையும் மீட்டனர்