குரோம்பேட்டை ஆர் எஸ் எஸ் பேரணியில் மத்திய மந்திரி முருகன்

ஆர்எஸ்எஸ் இயக்கம் ஆண்டுதோறும் விஜயதசமி அன்று நாடு முழுவதும் பேரணிகளை நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் பேரணி நடத்த திட்டமிட்ட போது உரிய அனுமதி கிடைக்காததால் ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு கோர்ட் அனுமதியுடன் தமிழ்நாடு முழுவதும் 55 இடங்களில் பேரணி நடத்தப்பட்டது. குரோம்பேட்டையில் நடந்த பேரணியில் மத்திய மந்திரி எல். முருகன் ,பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம், ஆர் எஸ் எஸ் பொறுப்பாளர் பத்மகுமார், மாவட்ட தலைவர்கள் சீதாராமன், […]
குரோம்பேட்டையில் கந்ந சஷ்டி பெருவிழா

குரோம்பேட்டை புருஷோத்தமநகர் ஸ்ரீ விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் கந்த சஷ்டி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காலையில் விசாகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று தீபாதாரணை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (19.11.23 ஞாயிறு) மாலை ஆறு மணிக்கு மேல் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத விசாகப் பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற இருக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஆலய நிர்வாகம் […]
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் , சங்கரய்யா உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை …

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் (15.11.2023) உடல்நலக் குறைவால் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு.என். சங்கரய்யா அவர்களின், சென்னை குரோம்பேட்டை இல்லத்திற்கு. நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன் சட்டமன்ற உறுப்பினர் . இ. கருணாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் .கே. பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் சங்கரய்யா குடும்பத்தினர் உள்ளனர்.
தோழர் என்.சங்கரய்யா காலமானார் இறுதி நிகழ்வுகள் நாளை நடைபெறும்

முதுபெரும் சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவருமான தோழர் என்.சங்கரய்யா (102) வயது உடல் நலக் குறைவின் காரணமாக நவம்பர் 15, 2023 காலை 9.30 மணியளவில் மருத்துவமனையில் காலமானார். அவருடைய உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திலும், மதியம் 2 மணி முதல் தியாகராய நகர், வைத்தியராமன் தெருவில் அமைந்துள்ள சி.பி.ஐ(எம்) மாநிலக் குழு அலுவலகத்திலும் வைக்கப்படவுள்ளது. இறுதி நிகழ்ச்சிகள் நாளை (நவம்பர் 16) காலை 10 மணியளவில், சி.பி.ஐ(எம்) […]
மறைந்த சுதந்திர போராட்ட தியாகியும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான சங்கரய்யாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியா விடை அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு .

பொதுத் தொண்டே வாழ்க்கையென வாழ்ந்த இச்செஞ்சட்டைச் செம்மலுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலமாக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என இந்த ஆண்டு ஜூலை 15 அன்று நான் அறிவிப்பு செய்திருந்தும், தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றை அறியாத குறுகிய மனம் படைத்த சிலரது சதியால் அது நடந்தேறாமல் போனதை எண்ணி இவ்வேளையில் மேலும் மனம் வருந்துகிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
தோழர் சங்கரய்யாவின் மறைவு தமிழக அரசியல் மற்றும் பொதுவாழ்வில் ஈடு செய்ய முடியாத இழப்பு .இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இரங்கல்.

சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா காலமான செய்தி பெரும் அதிர்ச்சியும் மன வேதனையும் அளிப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார் என தாம் நம்பிக்கை கொண்டிருந்தாக, நிலையில், சங்கரய்யாவின் மறைவு மிகவும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 3 […]
முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் N. சங்கரய்யா காலமானார்.

1 தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறு என்பது ஒரு தலைவர், தனிமனிதரின் வரலாறு மட்டுமல்ல, தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் பகுதி. 2.அந்நியர் ஆட்சிக்கு எதிராக வீறு கொண்டு எழுந்த சுதந்திர போர்க்களத்தில் மையப்புள்ளியாக விளங்கிய நகரங்களில் மதுரையும் ஒன்று… 3.படிப்பா? நாட்டின் விடுதலையா? என்ற கேள்வி மாணவரான சங்கரய்யாவின் நெஞ்சில் எழுந்தது. படிப்பை துறந்து நாட்டின் விடுதலைப் போராட்டப் பாதையை தனது வாழ்க்கை பாதையாக தேர்வு செய்தார்… 4 தனது வாழ்நாளில் சுமார் 8 ஆண்டுகள் […]
படிப்புக்காக உணவு விநியோகம்: பல்லாவரம் மாணவர் விபத்தில் உயிரிழப்பு

பல்லாவரம் அடுத்த அனகாபுத்துரை சேர்ந்த கல்லூரி மாணவர் மகேஸ்வரன்(19), சேலையூர் பாரத் கல்லூரியில் மெக்கனிக்கல் இஞ்னியரிங் முதலாமாண்டு படித்து வந்தார். குடும்ப சூழல் காரணமாக பகுதி நேரமாக ஆன்லைன் ஆப் மூலம் உணவு விநியோகம் செய்தார். நேற்று இரவு 10.30 மணிக்கு இருசக்கர வாகனத்தில் குரோம்பேட்டை சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தூக்கிவிசப்பட்ட மகேஸ்வரன் தலையில் பலத்தகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு […]
குரோம்பேட்டை வட்டார நாடார் ஐக்கிய சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

குரோம்பேட்டை வட்டார நாடார் ஐக்கிய சங்கம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் தெற்கு தெருவில் உள்ள திருமண கூடத்தில் நடைபெற்றது. ஏ.ஏ.முருகேசன் நாடார் வரவேற்புரை ஆற்றினார். தலைவர் வி.எஸ்.பி.மதிவாண நாடார் சங்கத்தின் வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார். ஆண்டறிக்கையை பொதுசெயலாளர் டி.எஸ்.முருகேசன் நாடார் வாசித்தார். வரவு செலவு கணக்குகளை மோரிஸ் நாடார் வாசித்தார். இந்நிகழ்வில் மூத்த உறுப்பினரும் ஆலோசகரமான ஏ.ராமஜெயம் நாடார். செயலாளர்கள் எஸ்.வெற்றிவேல் நாடார். எஸ். முருகேசன் நாடார். சங்க துணை தலைவர் டி.தர்மபால் நாடார். மற்றும் திரளான […]
பணியாட்கள் இல்லாமல் திணறும் தாம்பரம் மாநகராட்சி

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் தனியார் நோய்கண்டறிதல் மைய்யத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்துவைத்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் தாம்பரம் மாநகராட்சியின் மண்டல குழு தலைவர்கள் கருணாநிதி, ஜோசப் அண்ணாதுரை, காமராஜ், இந்திரன் உள்ளிட்டோர் தாம்பரம் மாநகராட்சியில் போதிய பணியாளர்கள் இல்லாததால் மக்களின் அடிப்படை பணிகள் தடைபடுவதாகவும் அதனால் பணியாட்களை நியமிக்க கோரிக்கை விடுத்தனர். இதனை கேட்டுகொண்ட அமைச்சர் அதிகாரிகள் […]