தூத்துக்குடி மதுரா கோட்ஸ் மில் இன்றுடன் தனது பனியை முடித்துக் கொள்வதாக தகவல்?

நேற்று இரவு 11மணிக்கு மதுரா கோட்ஸ் மில் தூத்துக்குடியில் எல்லா வகையான பணிகளையும் முடிவுக்கு கொண்டு வந்தது. 144 ஆண்டு கால வரலாறு படைத்த புகழ் பெற்ற தொழில் நிறுவனத்திற்கு இப்படி ஒரு நிலமையா?? 1970 களில் அரசு வேலையை நிராகரித்து விட்டு இருமடங்கு சம்பளம் இந்த மில்லில் வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்த மில் தொழிலாளர்களின் வாழ்க்கையை நம்மால் மறக்கவே முடியாது. இவர்கள் கூட்டமாக வேலைக்கு செல்லும் அழகே தனி. மேலும் ஹார்வி மில்லில் ( […]
புதுச்சேரி, விழுப்புரத்தில் வரலாறு காணாத மழை: ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளால் மக்கள் தவிப்பு

புதுச்சேரி / விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த புதுச்சேரி, விழுப்புரம் பகுதியில் வரலாறு காணாத அதிகனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ., புதுச்சேரியில் 49 செ.மீ. மழை பெய்துள்ளது. திங்கள்கிழமையைப் பொறுத்தவரையில், 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறியது: “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஃபெஞ்சல் புயல், […]
ஓராண்டுக்கு முன்பே கல்லூரி படிப்பை முடிக்கலாம்: புதிய நடைமுறைக்கு யுஜிசி ஒப்புதல்

இளநிலை பட்டப் படிப்பை 6 மாதம் அல்லது ஓராண்டு காலம் முன்கூட்டியே முடிப்பதற்கும், தேவைப்பட்டால் நீட்டித்துக் கொள்ளவும் வகை செய்யும் புதிய நடைமுறைக்கு யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக தென்மண்டல அளவில் தன்னாட்சி கல்லூரிகளுக்கான கருத்தரங்கம் சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த நவம்பர் 2-வது வாரத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) தலைவர் ஜெகதீஷ் குமார் கலந்துகொண்டார். அவர் பேசும்போது, ‘‘மாணவர்கள் விரும்பினால் இளநிலை பட்டப் […]
விழுப்புரம், புதுச்சேரியை புரட்டிப் போட்ட கனமழை: மயிலத்தில் 51 செ.மீ. கொட்டியது

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழை, வெள்ளத்தால் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த நெ.பில்ராம்பட்டு கிராமத்தில் தற்காலிக தரைப்பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களும், புதுச்சேரியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அதிகபட்சமாக 51 செ.மீ. மழை கொட்டியதால், பல பகுதிகள் வெள்ளக்காடாகின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவத்தினர், தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 30-ம் தேதி மாலை […]
தொழிலாளர் வைப்பு நிதி 3.0: புதிய முடிவுகளே நம்மை உயர்த்திப் பிடிக்கும்!

தொழிலாளர் வைப்பு நிதி 3.0: புதிய முடிவுகளே நம்மை உயர்த்திப் பிடிக்கும்! தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் (இபிஎப்ஓ) ‘3.0’ என்ற நவீன திட்டத்தின்கீழ் மிகப்பெரும் மாற்றங்களை செய்ய முன்வந்துள்ளது. இதன்படி, வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்துள்ளவர்கள், தங்கள் கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதியை வழங்கப் போவதாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் 6 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் வைப்பு நிதி கணக்கு […]
ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்ததால் 5 ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு

விக்ரவாண்டி – முண்டியம்பாக்கம் இடையே ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் விரைவு ரயில் மதுரை – சென்னை வைகை விரைவு ரயில் காரைக்குடி – சென்னை பல்லவன் விரைவு ரயில் சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் விரைவு ரயில் சென்னை – மதுரை தேஜாஸ் விரைவு ரயில் ஆகிய 5 ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.
50 கி.மீ. தொலைவில் ஃபெஞ்சல் புயல்

சென்னையில் இருந்து 90 கி.மீ., புதுவையில் இருந்து 80 கி.மீ., மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் தற்போது 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
பெஞ்சல் புயல் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் 4 மணிநேரத்திற்கும் மேலாக பயணிகள் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர்.
மெரினா கடற்கரையில் வீசும் பயங்கர காற்றால் பட்டினப்பாக்கம் லூப் சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்.
பலத்த காற்று எச்சரிக்கையை பொறுத்தமட்டில் புயல் இன்று கரையை கடக்கும்போது திருவள்ளூர் தொடங்கி மயிலாடுதுறை வரையிலான வடகடலோர மாவட்டங்களில் 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 90 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்