எழும்பூருக்கு பதில் தாம்பரத்தில் புறப்படும் ரெயில்கள்
எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் முடியாததால் தாம்பரத்தில் இருந்து ரயில்கள் புறப்படும் நடவடிக்கை மேலும் நீடிக்கப்பட்டு உள்ளது உழவன், அனந்தபுரி, சேது எக்ஸ்பிரஸ் ரயில்கள் நவம்பர் 10 தொடங்கி 29 ஆம் தேதி வரையும், குருவாயூர் எக்ஸ்பிரஸ் மறு அறிவிப்பு வரும் வரையும் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
டெல்லியில் கடும் குளிர்
டெல்லி இந்த குளிர்காலத்தின் இதுவரை இல்லாத அளவுக்கு குளிரான இரவைப் பதிவு செய்துள்ளது. நேற்றுப் டில்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது, இது இந்தப் பருவத்தில் இதுவரை இல்லாத மிகக் குளிரான இரவு நேரமாகும். இரவு நேர இயல்பை விட 3.3 டிகிரி குறைவாக இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) தெரிவித்துள்ளது. இதற்கு முன் கடந்த 2022 ஆம் ஆண்டில் 7.3 டிகிரி செல்சியஸ் பதிவானது .
கிரெடிட் கார்டில் செலவிடுவது அதிகரிப்பு!
நாட்டில், கிரெடிட் கார்டு மூலம் செலவிடுவது 23 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் மக்கள், கிரெடிட் கார்டு மூலம் 2.17 லட்சம் கோடி செலவிட்டிருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 15ஆம் தேதி சீமான் நடத்தும் தண்ணீர் மாநாடு.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஆடு-மாடு மாநாடு, மலைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு போன்றவற்றை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. 2026 தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், மற்ற அரசியல் கட்சிகள் அரசியல் பரப்புரைக் கூட்டங்கள், மாநாடுகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில், சீமான் நடத்தும் மாநாடுகள் பேசும் பொருளாகி உள்ளன. இதற்கிடையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் ‘15 -ந்தேதி தண்ணீர் மாநாட்டை’ நடத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது
பொங்கல் கால ரயில் பயண முன்பதிவு தொடங்கியது.
தமிழர் திருநாளான பொங்கல் 2026 ஜனவரி 14 அன்று கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் ரயிலில் பயணம் செய்ய இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு துவங்கியது. 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், ஜனவரி 9 முதல் ஜனவரி 18 வரை பயணிக்க விரும்புவர்கள், அதற்கேற்ப நவம்பர் 10 முதல் 19 வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். தினமும் காலை 8 மணி முதல் முன்பதிவு […]
குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப்பாதை திறப்பு எப்போது?
குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப்பாதை வேலை கடந்த 15 ஆண்டுகளாக வைக்கிறது இந்த பணி எப்போது முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது குரோம்பேட்டையில் ராதா நகர் செல்லும் பாதையில் தினசரி 2 லட்சத்திற்கு அதிகமான மக்கள்வந்து செல்கிறார்கள். ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது இதனை தீர்க்க அந்த பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது 2015 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டு 17 கோடிக்கு இந்த திட்டத்தை உருவாக்க டெண்டர் […]
ஜப்பானில் ஒரு கிலோ அரிசி விலை ரூ.12,500
ஜப்பானின் விலை உயர்ந்த அரிசி: ஒரு கிலோ விலை ரூ.12,500டோக்கியோ: உலகின் மிக விலை உயர்ந்த அரிசி ஜப்பானில் விளைவிக்கப்படுகிறது. இதன் விலை ஒரு கிலோ ரூ.12,500 ஆக உள்ளது. தெற்காசியாவில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு மொழி, வரலாறு, உணவு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் உள்ளது. என்றாலும் இந்த நாடுகளிடையே பொதுவான விஷயமாக அரிசி உள்ளது. ஒவ்வொரு நாடும் தனித்துவமான அரிசி வகைகளை உற்பத்தி செய்கின்றன. இவை பெரும்பாலும் எல்லோராலும் வாங்கக் கூடிய விலையிலேயே கிடைக்கின்றன. […]
.ஜனநாயகன் திரைப்படம் ஆயிரம் கோடியை வசூலிக்குமா?
படம் வெளியாவதற்கு முன்னரே ‘ஜனநாயகன்’ திரைப்படம் பல்வேறு உரிமைகளில் மிகப்பெரிய தொகையை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் என்ற நம்பிக்கை வலுத்துள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் சுமார் ரூ. 120 கோடிக்கு வாங்கியுள்ளது. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், இப்படத்தின் திரையரங்க உரிமையை ரூ. 120 முதல் ரூ. 130 கோடி வரை கொடுத்து வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் சேட்டிலைட் உரிமைகளும் ரூ. 50 […]
அமெரிக்கர்களுக்கு தலா ரூ.1.77 லட்சம்! – டிரம்ப் திட்டம்!!
அமெரிக்காவில் வாழும் அதிக வருவாய் உள்ளவர்களைத் தவிர்த்து, மற்ற அனைவருக்கும் தலா 2 ஆயிரம் டாலர் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். பல்வேறு உலக நாடுகளுக்கும் அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி விதிப்புகள் மூலம் கிடைத்த பல கோடி ரூபாய் வரி வருவாயைப் பகிர்ந்து, அமெரிக்க மக்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.
16-ந் தேதி முதல் மீண்டும் தீவிரம் அடையும் பருவமழை..!
இலங்கையையொட்டி தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலை, தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று, 16-ந் தேதியில் (ஞாயிற்றுக்கிழமை) இருந்து வடகிழக்கு பருவமழையை மீண்டும் தீவிரப்படுத்தும் என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார். இதனால் 16, 17-ந் தேதிகளில் காவிரி டெல்டா, தென் மாவட்டங்களிலும், 17-ந் தேதி இரவில் இருந்து 19-ந் தேதி வரை சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களிலும் மழையை எதிர்பார்க்கலாம் எனவும் அவர் கூறி உள்ளார். 20-ந் தேதிக்கு பிறகு […]