சென்னை அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் செந்தில் இவரது இருசக்கர வாகனத்தை இரு தினங்களுக்கு முன்பு அவரது மனைவியும் அவருடைய தம்பியும் எடுத்துக் கொண்டு வெளியில் சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல்துறை அனுப்பும் குறுந்தகவல் போன்று ஒரு மெசேஜ் செந்தில் செல்போன் எண்ணிற்கு வந்துள்ளது.

அந்த மெசேஜில் இருந்த லிங்கை கிளிக் செய்து என்ன அபராதம் என பார்க்க முயன்ற போது செல்போன் ஹாங் ஆகி விட்டது, அதன் பின் செந்தில் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டார்.

சிறிது நேரத்தில் செல்போனுக்கு ஓ.டி.பி.வந்துள்ளது, வங்கிக் கணக்கிலிருந்து 12,600 ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இது குறித்து சைபர் கிரைம் மோசடி எண் 1930 க்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.

அதே போல் பெரும்பாக்கம் காவல்நிலையத்திலும் மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார்.

போக்குவரத்து காவல்துறை விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் செலுத்தும் குறுந்தகவல் லிங்க் போன்று அனுப்பி நூதன மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடிக்க வேண்டும் என பணத்தை இழந்தவர் கோரிக்கை.