
தாம்பரம் மேற்கு பகுதி கிஷ்கிந்தா சாலையை சேர்ந்தவர் மணியன்
இவர் வீட்டில் 45 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தூர்வார சங்கர்(54) என்பவர் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டனர்,
அப்போது சங்கர் தீடீரென விஷவாயு தாக்கி கிணற்றில் மயங்கி விழுந்தார்,
தகவல் அறிந்து தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து நிலைய அலுவலர் பழனியாண்டி தலைமையில் விரைந்து வந்த வீரர்கள் முதலில் விஷவாயுவை அகற்றிய பின்னர் கிணற்றில் இறங்கி கயிறு கட்டி சங்கரை உயிருடன் மீட்டனர், மேலும் அவரை மயக்கம் தெளியவைத்து கையாளே தூக்கி சென்று அவசர ஊர்தியில் ஏற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்,
தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டதால் விஷவாயு தாக்கி கிணற்றில் விழுந்த கூலி தொழிலாளி உயிருடன் மீட்கப்பட்டு அப்பகுதியில் பாராட்டை பெற்றது.