அரசி​யல்​வா​தி​கள், நடிகர்​கள், நடிகைகள், தொழில​திபர்​கள், கோடீஸ்​வர்​கள் என பல தரப்​பினரும் சுவிஸ் வங்​கி​களில் பெரும் பணத்தை போட்டு வைக்​கின்​றனர்.

சுவிஸ் தேசிய வங்கி வெளி​யிட்ட ஆண்​டறிக்​கை​யில், கடந்த ஆண்டு இந்​தி​யர்​கள் சுவிஸ் வங்​கி​களில் முதலீடு செய்த பணம் 3 மடங்கு அதி​கரித்​துள்​ள​தாக தெரி​வித்​துள்​ளது. அதாவது, கடந்த 2024-ம் ஆண்டு 3.5 பில்​லியன் பிராங்க் (சு​விஸ் கரன்​சி) அளவுக்கு இந்​தி​யர்​கள் சுவிஸ் வங்​கி​களில் முதலீடு செய்​துள்​ளனர். இது இந்​திய ரூபாய் மதிப்​பில் ரூ.37,600 கோடி​யாகும். கடந்த 2021-ம் ஆண்​டுக்​குப் பிறகு இந்​தி​யர்​கள் செய்​துள்ள அதி​கபட்ச முதலீ​டாகும்.