
சென்னையை அடுத்த படூரில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான கல்லூரியில் (கம்பியூட்டர் சயின்ஸ்) பேராசிரியராக பணிபுரிந்து வந்த சஞ்சு ராஜு (36) என்கின்ற நபர் அதே கல்லூரியில் படித்துக் கொண்டு பேராசிரியராக பணிபுரிந்து வரும் 27 வயதுடைய இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
தகவல் அறிந்த சக பெண் பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சஞ்சு ராஜீவை அடித்து வெளுத்து வாங்கியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கல்லூரி மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் சஞ்சு ராஜீவிற்கு தர்மஅடி கொடுத்து அவரை சிறைப்பிடித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த போலீசார் கல்லூரி வளாகத்திற்கு சென்று பெண் பேராசிரியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக பேராசிரியரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மேற்கொண்டுவிசாரணை வருகின்றனர்.