சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாலகுமாரன் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் இவருடைய மனைவி வித்யா இவர்களுக்கு எட்டு மற்றும் இரண்டரை வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்,
இந்த நிலையில் வித்யா அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் காய்ந்த துணிகளை எடுபதற்காக சென்ற போது இரண்டு பெண் குழந்தைகளும் மாடிபடியில் விளையாடிய படி சென்று போது எதிர்பாராத வகையில் இரண்டரை வயது பெண் குழந்தையான ஆருத்ரா (2.5) நான்காவது மாடியில் உள்ள தடுப்பு கம்பியின் வழியாக தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது,
இதனால் அதிர்ச்சியடைந்த தாய் வித்யா படிகட்டில் வேகமாக.ஓடி சென்றதில் கால் தடுமாறி விழுந்ததில் முறிவு ஏற்பட்டது,
இதனை கண்ட சக குடியிருப்பு வாசிகள் உடனடியாக இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றவர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஆருத்ரா உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்,
தகவல் அறிந்து வந்த சங்கர் நகர் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்,
மேலும் கால்முறிந்த வித்யா சிகிச்சை பெற்று வருகிறார்.