
தாம்பரம் மாநகராட்சியின் 2025-26ம் ஆண்டுகான நிதி நிலை அறிக்கை கூட்டம் மேயர் க.வசந்தகுமாரி தலைமையில் நடைபெற்று வருகிறது, துணை மேயர் கோ.காமராஜ், ஆணையாளர் சீ.பாலச்சந்தர் மற்றும் அதிகாரிகள், மணடலக்குழு தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்ட நிலையில்,
நிதிக்குழு தலைவர் ரமணி ஆதிமூலம் 2025- 26 ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து அதனை மன்றத்தில் வாசித்தார்,
மேலும் நிநி நிலை அறிக்கையின் மீது விவாதம் நடைபெற்றது.இதில் 2025-26 ஆண்டில் வரவு 1,139.30 கோடி கணக்கிடப்பட்டு 1,088.69 கோடிக்கு வாகன நிறுத்துமிடம், பூங்கா மேம்பாடு, கல்வி, சுகாதாரம், குடிநீர், மழைநீர் வடிகால் உள்ளிட்ட மக்கள் பணிக்கான திட்டங்கள் செயல்படுத்தவும், வளர்ப்பு பிரணிகள் இறந்தால் புதைக்க இடம் புதிய நிதி நிலை அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது,
இதனை நிதிக் குழு தலைவர் அறிக்கை வாசிக்க முக்கிய திட்டங்களை மேயர் க.வசந்தகுமாரி வாசித்தார்,அதனையடுத்து நிதி நிலை அறிக்கையின் மீது விவாதம் நடைபெற்றது,கூட்டம் நிறைவு பெறும் நிலையில் அதிமுக எதிர்கட்சி தலைவர் சேலையூர் ஜி.சங்கர் தலைமையில் மாமன்ற உறுப்பினர் நிதி நிலை அறிக்கையில் மக்கள் திட்டம் இல்லை என புகார் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்,அப்போது திடீர்ரென தேசிய கீதம் ஒலிக்கப்பட்டதால் அதிமுக, திமுக உள்ளிட்டோர் எழுந்து நின்று தேசியகீதம் பாடினார்கள் அதனயடுத்து களைந்து சென்றனர்,கூட்ட அரங்கை விட்டு வெளியே வந்த அதிமுக எதிர்கட்சி தலைவர் ஜி.சங்கர் பேட்டியில் நிதி நிலை அறிக்கையில் மக்கள் பணி இல்லை என கூறினார்.