சென்னை அடுத்த கோவிலம்பாக்கத்தில் 15 தெருவை சேர்ந்தவர் முனுசாமி(65) இவர் மனைவி ராணி(55), இவர்களது மகள் சாந்தி(47), சாந்தியின் கணவர் ரகு(49) அகியோர் குணசீலன் என்பவரின் வீட்டில் வாடகைக்கு ஒரு சிறிய அரையில் தங்கியுள்ளனர்.
இதில் முனுசாமி, ராணி ஆகியோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாதவர்கள், சாந்தியின் கணவர் ரகு வாய் பேச முடியாத மாற்றுத்திறளாளி, இதனால் சாந்தி ஒருவர் மட்டும் வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றினார்.
சாந்தி- ரகு ஆகியோரின் மகன் அஜய் குமார்(25) திருமணமாகி தனியாக வசிக்கும் நிலையில் மனைவி குழந்தையுடன் தாய்வீட்டிற்கு சென்றதால் அம்மா, அப்பா தாத்தா பாட்யுடன் நேற்று இரவு தங்கிய நிலையில் அதிகாலை 6 மணியளவில் திடீரென அந்த சிறிய அறையில் வெடித்துள்ளது,
அக்கம் பக்கத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில் ரகு கழிவறையில் இருந்து வெளியே வந்துள்ளார்,
விபத்து ஏற்பட்ட அறையில் சமையல் கேஸ் கசிந்துள்ளது, அப்போது மின்சார ஸ்சுட் இயக்கியதால் கசிந்த கேஸ் அறையில் இருந்த அழுத்ததால் வெடித்துள்ளது இதனால் கதவுகள் ஜன்னல்கள் உடைந்துள்ளது, பொருட்கள் எரிந்து உருகியுள்ளது,
அறையில் துக்கத்தில் இருந்த முனுசாமி, ராணி, சாந்தி, அஜய்குமார் ஆகியோர் பலத்த தீ காயம் ஏற்பட்ட நிலையில் அவர்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் அங்கு இருந்து மேல் சிகிச்சைகாக கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே
மேடவாக்கம் காவல் ஆய்வாளர் பரகத்துல்லா தலைமையில் போலீசார், தடய அறிவியல் துறையினர் ஆகியோர் சமையல் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட தடயங்களை சேகரித்து விசாரணை செய்து வருகிறார்கள்,
வருவாய் துறை சார்பில் சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் உள்ளிட்டோர் நேரில் விசாரணை செய்து வருகிறார்கள்…