மின்கட்டணம் – புதிய நிபந்தனை

இந்த மாதம் முதல் 4000 ரூபாய்க்கு அதிகமான மின் கட்டணத்தை நேரடி பணமாக செலுத்த முடியாது ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும்என மின்வாரியம் அறிவிப்பு அடுத்தடுத்து வரும் மாதங்களில் நேரடியாக செலுத்தும் தொகை படிப்படியாக குறைக்கப்படும் ₨1000 அல்லது அதற்கு மேலான மின் கட்டணங்களை ஆன்லைனில் மூலமே செலுத்த வேண்டும் எனவும் அறிவிப்பு.
அரசை விமர்சித்து எழுதுவதனாலேயே மட்டுமே, பத்திரிகையாளர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யக்கூடாது

உ.பி. மாநில நிர்வாகத்தில் நிலவும் சாதிய பாகுபாடு குறித்து கட்டுரை எழுதிய பத்திரிகையாளர் அபிஷேக் உபாத்யாய்க்கு எதிராக பதிந்த FIR-ல் இடைக்கால பாதுகாப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் கருத்து
இமாச்சலப் பிரதேசத்தில் கழிப்பறைக்கு வரி

இமாச்சலப் பிரதேசத்தில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள கழிப்பறைகளின் எண்ணிக்கை படி ஒவ்வொன்றுக்கும் ரூபாய் 25 வீதம் மாதம் தோறும் அரசு வரி வசூலிக்கப்படுவதாக புகார் அளித்துள்ளது.திடக்கழிவு மேலாண்மை வரி என இது வசூலிக்கப்படுகிறது.இதற்கு அங்குள்ள எதிர்க்கட்சியான பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய குடும்பங்களை கண்காணிக்கும் சீனா

சீன தயாரிப்புகளின் மூலமாக இந்திய குடும்பங்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட அதிகமான வாய்ப்பு இருப்பதாக ஆன்லைன் சர்வே நிறுவனமான லோக்கல் சர்க்கிள் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சீனாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன், லேப்டாப், ரெப்ரிஜிரேட்டர், கார்பாகங்கள், எல்இடி பல்பு என ஏராளமான பொருட்கள் இந்திய சந்தையை ஆக்கிரமிப்பு செய்துள்ளன. இதன்மூலம், 79 சதவீத இந்திய குடும்பங்கள் சீன ரேடார் மூலமாக உளவு பார்க்கப்படுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
திருப்பதி தங்க கொடி மரம் சேதம்

திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்க இருந்த நிலையில் தங்கக்கொடி மரம் சேதம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கக் கொடி மரத்தில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.கொடியேற்றத்திற்கான கயிறை மரத்தின் உச்சியில் பொறுத்த முயற்சித்தபோது வளையம் உடைந்துள்ளது. தங்கக் கொடி மரத்தில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதில், பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கூல் லிப்: “குண்டர் சட்டத்தில் நடவடிக்கை தேவை”
‘கூல் லிப்’ உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டும். தமிழ்நாட்டில் கூல் லிப்பால் பள்ளி மாணவர்கள் வாய்ப்புற்று நோய்க்கு ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களை பாதுகாக்க வேண்டும் – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
நடிகரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார்!

லட்டு விவகாரத்தில் எந்தவித தொடர்பும் இல்லாத தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாகவும், இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கும் வகையில் பேசியதாகவும் புகார் மனுவில் தெரிவிப்பு.
இன்றைய தங்கம் நிலவரம் 04-10-24
தமிழ்நாடு அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

தமிழ்நாட்டில் மீன் பிடிக்க சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதிக் கோரிய வழக்கில் நிபுணர் குழுவின் இறுதி அறிக்கையை அமல்படுத்தாததால் தமிழ்நாடு அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி. சுருக்குமடி வலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கௌரவம் பார்ப்பதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பட்டாசு கடைகள் அமைக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- தமிழக அரசு.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இ-சேவை மையங்களிலும் இதற்காக விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலமாக மட்டுமே உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.