ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தினால் சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை அறிக்கை தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு முதல் தற்போது வரை காற்றுடன் கூடிய கனமழையானது சென்னை புறநகர் பகுதிகளான வண்டலூர், பெருங்களத்தூர் தாம்பரம் பல்லாவரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் விடாமல் கன மழை பெய்து வருகிறது
இந்த நிலையில் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி சாலையில் கால்வாயில் அடைப்பு இல்லாமல் மழைநீர் வெளியேற செய்த போக்குவரத்து காவலர்கள் இருவர் ஈடுபட்டபோது இரண்டு விரால் மீன்கள் துள்ளிக்குதித்து ஜி.எஸ்.டி சாலையில் நீந்தியது,
இதனை கண்ட இரண்டு போக்கு வரத்து போலீசாரும் புடி படி என ஓடி ஒரு வீரால் மீனை பிடித்தனர், மற்றொரு மீன் தப்பியது பிடித்த விரால் மீனை போலீசார் சமைத்து ருசிக்க எடுத்து வர சென்றனர்