
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, அடையாறு, சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திரைப் பயணம் மற்றும் வாழ்க்கை வரலாற்றை பற்றி விளக்கிடும் வகையில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்டார். உடன் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் த.வேலு, ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மரு. இரா. வைத்திநாதன், இ.ஆ.ப, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கவிப்பேரரசு வைரமுத்து, சிவாஜி கணேசன் அவர்களின் மகன்கள் ராம்குமார் மற்றும் பிரபு குடும்பத்தினர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.