- ஒன்றாம் படி: ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகள் போன்றவைகளை முதல் படியில் வைப்பார்கள்.
- இரண்டாம் படி: ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகளை இரண்டாம் படியில் வைப்பார்கள்.
- மூன்றாம் படி: மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகளை மூன்றாவது படியில் வைப்பார்கள்.
- நான்காம் படி: நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளை நான்காம் படியில் வைப்பார்கள்..
- ஐந்தாம் படி: ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகளை ஐந்தாவது கொலு படியில் வைப்பார்கள்.
- ஆறாம் படி: ஆறறிவு மனிதர்கள் பொம்மைகளை ஆறாவது கொலு படியில் வைப்பார்கள்.
- ஏழாம் படி: மனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகளை ஏழாம் படியில் வைப்பார்கள்.
- எட்டாம் படி: தேவர்கள், அஷ்டதிக்குப் பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் மற்றும் தேவதைகளின் உருவங்களை வைப்பார்கள்.
- ஒன்பதாம் படி: பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் வைக்க வேண்டும்.