நாம் காலை எழுந்தவுடன் உங்கள் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். அல்லது செல்வமகளான மகாலட்சுமியின் புகைப்படத்தை பார்த்தால் அன்றைய நாள் மிகவும் அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். குறிப்பாக அந்த நாள் மங்களகரமான நாளாக இருக்குமாம்.
காலை கண் விழித்ததும் முதன் முதலில் சூரியனை தரிசிப்பது மிகவும் நல்ல விஷயம் ஆகும்.
மேலும் தாமரை பூ, சந்தனம், கடல், மலர்கள், அழகான இயற்கை காட்சிகளை பார்ப்பதன் மூலம் அன்றைய நாள் மிகவும் சிறப்பான நல்லாக இருக்கும். குறிப்பாக அன்றைய நாள் முழுவதும் மிகவும் புத்துணர்ச்சியாக இருப்பீர்கள்.
காலையில் தூங்கி எழுந்திரிக்கும்பொழுது கண்ணாடியில் உங்கள் முகத்தை காண்பதன் மூலம் மகாலட்சுமியின் கடாட்சியம் உங்களுக்கு கிடைக்கும்.
அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுத்து நடைப்பயிற்சி செய்து, சூரியனை தரிசித்தால் அன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டகரமாக இருக்கும்.
மேலும் பயிர்கள் விளையும் வயல், சிவலிங்கம், கோயிலின் ராஜகோபுரம், உங்கள் வீட்டில் வளர்க்கப்படும் பசுமாடு, நறுமணம் வீசும் மலர்கள் நிறைந்த பூந்தோட்டம். இது போன்ற விஷயங்களை பார்ப்பதன் மூலமாகவும் அன்றைய பொழுது உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.