சென்னை மெட்ரோ இரயில்‌ திட்டத்தை செயல்படுத்திட தேவையான ஒன்றிய அரசின்‌ நிதி, சமக்ரசிக்க்ஷா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, இலங்கை கடற்படையினரால்‌ இந்திய மீனவர்கள்‌ கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்‌ அடங்கிய மனுவினை வழங்கினார்‌. இச்சந்திப்பின்போது, கழக மக்களவை குழுத்‌ தலைவர்‌ திரு. டி.ஆர்‌.பாலு, கழக நாடாளுமன்றக்‌ குழுத்‌ தலைவர்‌ திருமதி கனிமொழி, தலைமைச்‌ செயலாளர்‌ திரு. நா. முருகானந்தம்‌, இ.ஆ.ப., ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.