
20 வருடங்கள் கழித்து ஓய்வூதியத்தில் 20% கூடுதல் ஓய்வூதிய உயர்வு என்பதற்கு மாற்றாக அடிப்படை ஓய்வூதியத்தில் ஆண்டுக்கு 1% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்!
தற்பொழுது ஓய்வூதியர் ஓய்வு பெற்ற பின்பு 20 ஆண்டுகள் கழித்துதான்…
ஓய்வூதியத்தில் 20% கூடுதலாக ஓய்வூதியம் பெறக்கூடிய நிலை உள்ளது. இது நீண்ட நெடிய காலமாகும்.
இந்த இடைப்பட்ட 20 வருட காலத்தில், ஏறக்குறைய 90% ஓய்வூதியர்கள் எந்தவித அடிப்படை கூடுதல் ஓய்வூதியம் ஏதும் பெறாமலேயே தங்கள் வாழ்நாளை முடித்து மறைந்து விடுகிறார்கள் என்பதை யாரும் மறுக்க இயலாது.
இது இயற்கை நீதிக்கு புறம்பானதாகும்
சமூக நீதிக்கு எதிரானதாகும்.
இதன் அடிப்படையில் தான்
70 வயது முடிவில் ஓய்வூதியத்தில் 10% கூடுதல் ஓய்வூதியம் வேண்டும் என்ற கோரிக்கையும் அதனை நிறைவேற்றித் தருவதாக தன்னுடைய தேர்தல் அறிக்கையாக ஆட்சியாளர்கள் குறிப்பிட்டு தற்பொழுது செயல்படுத்தாமல் நிலுவையில் உள்ளது.
அடிப்படை ஓய்வூதியத்தை அதிகரித்தல் கோரிக்கையை மிக எளிமையாக நிறைவேற்றும் வகையில் வருடம் தோறும் அடிப்படை ஓய்வூதியத்தில் 1% கூடுதல் ஓய்வூதியமாக அளித்தால் அனைத்து ஓய்வூதியர்களும் உரிய காலங்களில் இயற்கையை நீதிக்கு உட்பட்டு உரிய ஓய்வூதிய பலன்களை பெற இயலும்.
ஆகவே 60 வயதில் நிறைவடைந்த உடன் ஓய்வு பெறும் ஒவ்வொரு ஓய்வூதியரும் ஒவ்வொரு ஆண்டும் அடிப்படை ஓய்வூதியத்தில் 1% கூடுதல் ஓய்வூதியம் அதிகம் பெறும் வகையில் கோரிக்கையை ஓய்வூதியர்கள் வலுவாகபரவலாக கொண்டு செல்ல வேண்டும்.
நமக்கான தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களுக்கான இந்த கோரிக்கையை அனைத்து தளங்களிலும் எடுத்துச் செல்லும் வகையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இந்த பதிவினை பகிர்ந்து தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென்று அன்பான வேண்டுகோள் வைக்கப்படுகிறது.🙏
அளவு மாற்றம் குணமாற்றத்தை ஏற்படுத்தட்டும்!
தமிழக அரசு ஓய்வூதியர்கள் அனைவருக்கும் இந்தப் பதிவை தொடர்ந்து பரப்புங்கள்.