1.உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்ட நாடு.
17,000 தீவுகள் உள்ளன. 6000 தீவுகளில் மக்கள் வசிக்கின்றார்கள்.
2.மக்கள்தொகை 27 கோடி. உலகில் நான்காம் இடம்.
3. 90 விழுக்காட்டினர் முஸ்லிம்கள்
4.நாடு முழுவதும் 700க்கும் மேற்பட்ட வட்டார வழக்கு மொழிகள் பேசப்படுகின்றன.
ஆட்சி மொழி பஹாசா இந்தோனேசியா ஆகும்.
5.உலகின் மிகப்பெரிய மலரான ராஃப்லேசியா ஆர்னோல்டி வளர்கின்றது.
விட்ட 3 அடி.
6.உயிர்ப்பன்மை கொண்ட நாடு.
7.உலகின் மிகப்பெரிய பல்லி கொமோடோ டிராகன், இங்கே சில தீவுகளில் உலவுகின்றன.
8.இந்து, பௌத்த சமயங்களைப் பின்பற்றுவோரும் உள்ளனர்.
9.பசிபிக் நெருப்பு வளையத்தின் மீது இருப்பதால்,
நிலநடுக்கங்கள், சுனாமிகள், எரிமலை வெடிப்புகள் உள்ளிட்ட இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுகின்றன.
10.ஜாவாவில் போரோபுதூர், உலகின் மிகப்பெரிய பௌத்த கோயில் மற்றும் யுனெஸ்கோ உலகப் பண்பாட்டு இடங்களுள் ஒன்று.
11.உலகின் மிகப்பெரிய பாமாயில் ஆக்கும் நாடு. பெரும் அளவில் ஏற்றுமதி செய்கிறார்கள்
12.இந்தோனேசியப் பொருளாதாரம் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரியது,
விவசாயம், சுரங்கங்கள் மற்றும் பொருள்களை ஆக்குகின்றார்கள்.
13.இந்தோனேசிய நிழல் கைப்பாவை தியேட்டர், “வயங்” என்று அழைக்கப்படும்.
யுனெஸ்கோவால் பாரம்பரியத்தின் தலைசிறந்த படைப்பாக ஏற்கப்படுகிறது.
- பாலி தீவு
உலகின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று.
அழகான கடற்கரைகள், இந்து கோவில்கள் உள்ளன.
15.இந்தோனேஷியா G20 இன் உறுப்பினராக உள்ளது.
16.இந்திய, சீன, அரேபிய மற்றும் ஐரோப்பிய கலாச்சாரங்களின் செல்வாக்குடன்
இந்த நாட்டிற்கு ஒரு சிக்கலான வரலாறு உண்டு.
நெதர்லாந்து நாட்டின் பிடியில் இருந்து 1945 இல் விடுதலை பெற்றது.
17.இந்தோனேஷியா உலகின் இரண்டாவது பெரிய காஃபி விளையும் நாடு.
சுமாத்ரா தீவு காஃபிக்கு புகழ் பெற்றது.
18.பன்முக சமூகம் கொண்ட நாடு.
தேசிய குறிக்கோள் “பின்னெகா துங்கல் இகா” ஆகும்.
அதாவது “வேற்றுமையில் ஒற்றுமை”
19.அருகிவரும் உயிரான ஒரங் உட்டான், இந்தோனேஷியாவில் போர்னியோ மற்றும் சுமத்ரா மழைக்காடுகளில் வாழ்கின்றன.
அதன் வாழ்விடத்தை பாதுகாக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.