குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அக்டோபர் 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
12ஆம் தேதி இரவு விழாவின் முக்கிய நிகழ்வான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது.
இத்திருவிழாவில் வேடம் அணியும் பெரும்பாலான பக்தர்கள் 21 நாட்கள் விரதம் இருப்பார்கள்.
நேற்று முதல் 12ஆம் தேதி வரை 21 நாட்கள் வருவதால், தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் குவிந்தனர்.