பொதுவாக நாம் அனைவருமே பெருமாள் கோவிலுக்கு சென்றிருப்போம். நாம் பெரும்பாலும் எல்லா கிழைமைகளிலும் அல்லது கோவில் திறந்திருக்கும் போது என்று கோவில்களுக்கு சென்றிருப்போம்.
ஆனால் பெருமாளுக்கு உகந்த நாள் என்று ஓன்று உள்ளது. அந்த நாளில் நாம் பெருமாள் கோவில்களுக்கு சென்றால் பல நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில் நம்மில் பலருக்கும் பெருமாளுக்கு உகந்த நாள் எது என்று சரியாக தெரியாது. அதனால் இப்பதிவின் மூலம் பெருமாளுக்கு உகந்த விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பொதுவாக நாம் அனைவருமே பெருமாள் கோவில்களுக்கு எல்லா நாட்களிலும் செல்வோம். ஆனால் பெருமாளுக்கு உகந்த நாள் என்றால் அது சனிக்கிழமை தான். சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிகளுக்கு சென்றால் சகல செல்வங்களுக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம். அதிலும் புரட்டாசி மாத சனிக்கிழமை என்றால் சொல்லவே வேண்டாம்.