தாழம்பூர் அருகே 11 வகுப்பு பள்ளி மாணவி கூட்டு பாலியல் பலத்காரம், 2 சிறார் உள்ளிட்ட 3 பேர் கைது
தாழம்பூர் அடுத்த மேலக்கோட்டையூரில் திருச்சியை சேர்ந்த குடும்பம் 4 ஆண்டுகளாக வசித்து வந்தது.
அந்த குடும்பத்தை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி அருகில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 18ம் தேதி மாலை பள்ளி முடித்து வீடு சென்ற நிலையில் இயற்கை உபாதை கழிக்க திறந்தவெளி பகுதிக்கு மாணவி சென்றுள்ளார்.
அதே ஊரை சேர்ந்த உறவினர்களாக 2 சிறார்கள், திருமணமான சுந்தர்(23) என்பவன் உள்ளிட்ட 3 பேர் பெண்ணிடம் பேச்சு கொடுத்து கூட்டாக தூக்கி சென்று காட்டுப்பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
வீடு திரும்பிய மாணவி தந்தையிடம் தனக்கு ஏற்பட்ட பதிப்பை சொல்ல தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
மாணவியை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முறையாக மருத்துவ பரிசோததனை நடைபெற்று ஆதாரங்கள் திரட்டப்பட்டது.
அதே வேலையில் உதவி ஆணையாளர் வெங்கடேசன், ஆய்வாளர் சார்லஸ், உதவி ஆய்வாளர் சுமன் உள்ளிட்டோர் குற்றவாளிகளை தேடிய நிலையில் மூன்று பேரூம் காட்டில் மறைந்தனர்,
இதனையடுத்து தொடர் தேடுதல் வேட்டையில் 16 வயது இரண்டு சிறார்கள், சுந்தர்(23) ஆகிய மூன்று பேர் தாழம்பூர் போலீசார் பிடித்த நிலையில் இந்த வழக்கை சிட்லபாக்கம் அணைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு நிதிமன்றத்த ஆஜர்படுத்தி சிறார்கள் இரண்டுபேரை செங்கல்பட்டு சீர் திருத்தபள்ளிக்கும், சுந்தரை புழல் சிறைக்கும் அனுப்பிவைத்தனர்.