மறைந்த முன்னாள் நகர துணை செயலாளர் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கலந்துக்கொண்டு நலத்திட்ட உதவிகள், தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய திமுகவினர் 30 பேரில் 9 தங்கம், 21 வெள்ளி நாணயங்களை வழங்கினார்.

மறைந்த முன்னாள் நகர துணை செயலாளர் திருமதி.சுப்புலட்சுமி சர்தார் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு,

அவரது மகனும் மாநகர துணை அமைப்பாளர் ச.ராஜேஷ் ஏற்பாட்டில்

நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்சி நடைபெற்று,

சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் மாநகர செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.எஸ்.ஆர் ராஜா எம்,எல்,ஏ கலந்துக்கொண்டு மறைந்த சுப்புலஷ்மி சர்தார் ஆகியோரின் திரு உறுவபடத்திற்கு மலர் தூவி மறியாதை செய்தார்.

அதனை தொடர்ந்து 500 பேரூக்கு புடவை, லுங்கிகளை வழங்கிய நிலையில் பங்கேற்பாளர்களுக்கு உணவு வழங்கினர்.

முன்னதாக நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய 30 திமுக வினரில் 9 பேருக்கு தங்க நாணயமும், 21 பேருக்கு வெள்ளி நாணயங்களும், பரிசாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர்கள் D. காமராஜ், S.இந்திரன், 60 வது வட்ட செயலாளர் சஞ்சீவி, கழக பேச்சாளரும் முன்னாள் மாவட்ட பிரதிநிதி திரு.SG. கருணாகர பாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், கோல்டு பிரகாஷ், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கார்த்திக், சிவசுப்பு, ஜெ.இன்சமாம்முல்ஹக், ராஜேஷ் சர்தார் அவர்களின் சகோதரர்களான R.உதயா, R. சுரேஷ். மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் (து) அமைப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.