தாழம்பூர் அடுத்த வேங்கடமங்லத்தில் பில்லி சூனியம் பயத்தால் மன அழுத்தம் பாதித்த ஐ.டி பொறியாளர் தனக்கு தானே உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை

தேனி மாவட்டத்தை சேர்ந்த ஐ.டி பொறியாளர் கார்த்திகேயன்(50), வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலத்தில் குடும்பத்துடன் வசித்துவந்த நிலையில் மன அழுத்தம் காரணமாக புலம்பியவாறு இருந்துள்ளார்.

இதனால் குடும்பத்தினர் பரிகார பூஜைகளை செய்துவந்துள்ளனர்.

அதே வேளையில் தனக்கு பில்லி சூனியம் வைத்துள்ளதாகவும் அதனால் தான் பாதிக்கப்பட்டதாக கார்திகேயன் கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முந்தினம் புதியதாக பெல்ட் மற்றும் பிளக்பாயின் ஒயர்களை வாங்கி வந்த நிலையில் அவரின் அறைக்கு சென்று தழிட்டு கொண்டார்.

இந்த நிலையில் வெகுநேரமாக வெளியே வராததால் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது உடல் முழுவதும் ஒயர்கள் சுற்றிய நிலையில் மின் இணைப்புடன் இருந்துள்ளார்.

இதனால் அவரை மீட்டு அருகிள் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு கார்திகேயன் இறந்துவிட்டதாக கூறியதை அடுத்து தாழம்புர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.

மேலும் தற்கொலை செய்து கொண்ட கார்திகேயனின் எழுதிய கடித்தை கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.