தேவையான பொருட்கள்: தோசை மாவு – 2 கப், மஞ்சள் குடைமிளகாய் – 2, பச்சை குடைமிளகாய் – 2, சிவப்பு குடைமிளகாய் – 2, பச்சைப் பட்டாணி – 1 கப் துருவிய பன்னீர் – கால் கப், பெ.வெங்காயம் – 4, கொத்தமல்லி – சிறிதளவு தழை, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: குடைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய குடைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, வேக வைத்த பட்டாணி சேர்த்து கலந்து வைக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி தோசை மாவை சற்று கனமாக ஊற்றவும். அதன் மீது குடைமிளகாய் வகைகள், வெங்காயம், கொத்தமல்லி தழை, பன்னீர் துருவர் ஆகியவற்றை பரவலாக தூவவும். தோசையை சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி மூடிவைக்கவும். ஒரு பக்கம் நன்றாக வெந்தாலே போதுமானது. அதை அப்படியே எடுத்து பரிமாறலாம். சூப்பரான குடைமிளகாய் பன்னீர் தோசை ரெடி.