• முருகப்பெருமான் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்து கார்த்திகேயன் என்ற பெயரை பெற்று அவருடைய அருளை அடைவதற்கு நாம் எடுக்கும் விரதம் தான் இந்த கார்த்திகை விரதம்.
  • முருகப் பெருமானுக்கு கார்த்திகை விரதம் கடைப்பிடிப்பவர்கள் முந்தைய நாளான பரணி நட்சத்திர தினத்தன்று நண்பகல் வரை உணவு எடுத்துக்கொண்டு அன்று இரவு உணவு சாப்பிடாமல் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.
    •அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு முருகன் கோயிலுக்கு சென்று முருகனை வழிபாடு செய்ய வேண்டும். கார்த்திகை விரதம் எடுப்பவர்கள் அன்று நாள் முழுவதும் உணவு எதுவும் சாப்பிடாமல் முருகனின் மந்திரங்கள், ஸ்கந்த புராணம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா போன்றவற்றை படிப்பதும், பாராயணம் செய்வதும் சிறந்தது.
  • கட்டாயமாக உணவு சாப்பிட வேண்டிய நிலையில் உள்ளவர்கள் பழம், பால் ஆகியவற்றை உண்ணலாம். விரத தினத்தன்று பகல் மற்றும் இரவு தூங்காமல் முருக வழிபாடு மற்றும் தியானத்தில் இருந்து, மறுநாள் காலையில் நீராடி முருகனை வழிபட்ட பின்பு விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.