நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்களிடையே பீதி நிலவுகிறது.

நெல்லை மாவட்டம் பாபநாசம், அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய பகுதிகளிலும், தென்காசி மாவட்டம் கடையம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட இடங்களிலும் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்குள்ள வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வெட்ட வெளியில் தஞ்சமடைந்துள்ளனர்.