ஹங்கேரியில் நடைபெறும் 45ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய பெண்கள் அணியும் தங்கம் வென்று அசத்தல்.

அஜெர்பைஜான் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் திவ்யா தேஷ்முக், ஹரிகா, வந்திகா அக்ரவால் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணியின் தங்கம் உறுதியானது.

ஓபன், பெண்கள் என இரண்டு பிரிவிலும் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை.