
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சிறார் ஆபாச படங்களை பார்த்ததாக திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு.
வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளைஞர் மனு.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‘சிறார் ஆபாச படம் பார்ப்பது சட்டப்படி தவறு அல்ல; அதனை மற்றவர்களுக்கு அனுப்புவதுதான் தவறு’ எனக் கூறி வழக்கில் இருந்து இளைஞரை விடுவித்தார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை எதிர்த்து, குழந்தைகள் உரிமை அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அளித்த தீர்ப்பை ரத்து செய்தது.
ஆபாச படம் பார்த்த நபர் மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவு.
திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் புதிய பரிந்துரைகள் அடிப்படையில் வழக்கை விசாரிக்க ஆணை.
போக்சோ சட்டப்பிரிவு 19, 21-ல் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு.