சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் கஞ்சா விற்பனையை போலீசுக்கு தகவல் அளித்த நபரின் தலையில் குழவிகல்லை போட்டு கொலை, கொளையாளிகள் குறித்து போலீசார் விசாரணை

சென்னை பெரும்பாக்கம் எழில் நகர் தமிழ்நாடு நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கலைவாணன்(29) இவருக்கு செளந்தர்யா எனகிற மனைவி ஒருமகன், ஒருமகள் உள்ளனர்.

ஏற்கனவே கொலை வழக்கு கொலை முயற்சி உள்ளிட்ட 7 வழக்குகள் உள்ள சரித்திர பதிவேடூ குற்றவாளி

இந்த நிலையில் இவரின் வீட்டருகே சில கஞ்சா விற்பனை செய்துள்ளனர்.

அதனை கலைவாணன் தட்டி கேட்டுள்ளார். மேலும் போலீசுக்கும் தகவல் அளித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பெரும்பாக்கம் எழில் நகர் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் போலீசார் 300 பேர் அதிரடியாக கஞ்சா சோதனை செய்தனர்.

இந்த சம்பவத்தை கலைவாணனை சம்பந்தப்படுத்தி சிலர் பேசியதாக கூறப்படுகிறது. அதனால் கலைவணணும் எதிர்த்து தரக்குறைவாக சரளா எனும் பெண்ணை பேசியுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு அதே குடியிருப்பில் குடிபோதையில் கலைவாணன் தூங்கியுள்ளார்.

இந்த காலை பார்த்தபோது அம்மிக்கல்லின் குழவி கல்லை தலையில் போட்டு கலைவாணண் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

தகவல் அறிந்த பெரும்பாக்கம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி அப்பகுதியை சேர்ந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.