தாம்பரம் அருகே சாலையோர தடுப்பு சுவற்றில் இருசக்கர வாகனம் மோதி விபத்தில் மனைவி கண் முன்னே கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விஜயகுமார் (40) – குணசுந்தரி (32) தம்பதியினர்.
இருவரும் இன்று அதிகாலை சுமார் ஒரு மணி அளவில் அவர்களது இருசக்கர வாகனத்தில் மின்டிலிருந்து, கடலூருக்கு மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக சென்றுள்ளனர்.
அப்போது தாம்பரம், இரும்புலியூர் பாலத்தின் மேல் அதிவேகமாக வந்தபோது கட்டுபட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையின் இடது பக்க சிமெண்ட் தடுப்பு சுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் விஜயகுமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காயம் அடைந்த அவரது மனைவி மீட்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தகவல் அறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விஜயகுமாரின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.