குரோம்பேட்டையில் நடைபயிற்சிக்குச் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
குரோம்பேட்டை விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் சாந்தகுமாரி(59), இவர் குரோம்பேட்டை எம்.ஐ.டி.சிக்னல் அருகே சர்வீஸ் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது அவரது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அப்பெண்ணின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டு கத்தினார். பின்னர் பொதுமக்கள் உதவியோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் காவல்துறையினர் விரைந்துவந்து விசாரணை செய்தனர். அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.