சென்னை துரைப்பாக்கத்தில் 32 வயது பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து சாலையோரத்தில் வீசி சென்ற சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

உல்லாசமாக இருப்பதற்காக அழைத்துவரப்பட்ட 32 வயது பெண்ணை, துண்டு துண்டுகளாக வெட்டி அரை டேங்க் தண்ணீரில் கழுவி சூட்கேசில் பேக் செய்து சாலையோரத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மணலியை சேர்ந்த 32 வயது பெண் தீபா என்பவர், துரைப்பாக்கம் பார்த்தசாரதி நகரில் வசித்து வந்த மணிகண்டன் என்பவர் உடன் நேற்று முன்தினம் இரவு தங்கி உள்ளார். இருவரும் உல்லாசமாக இருந்த நிலையில், நேற்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் தீபாவை மணிகண்டன் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். துரைப்பாக்கம் பார்த்தசாரதி நகரில் உள்ள தனது அக்கா வீட்டில், யாரும் இல்லாததை பயன்படுத்திக்கொண்ட மணிகண்டன், தீபாவுடன் உல்லாசமாக இருந்து உள்ளான். நேற்று அதிகாலை ஏற்பட்ட தகராறில், தீபாவை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த தீபா உடல் முழுவதும் ரத்தக் கசிவு இல்லாத அளவுக்கு உடலை முழுமையாக தண்ணீரால் கழுவி உள்ளார். அரை டேங்க் தண்ணீரில் முழுமையாக உடலை கழுவி நேற்று மதியம் சூட்கேசில் பெண்ணின் உடலை மணிகண்டன் பேக் செய்து உள்ளார். ஊருக்கு சென்ற உறவினர்கள் இன்றைய வருவதாக தகவல் சொன்னதை எடுத்து, அவசர அவசரமாக சூட்கேஸை எடுத்துச் சென்ற மணிகண்டன் குமரன் குடில் பிரதான சாலை ஓரத்திலேயே பெண்ணின் உடலை வீசி சென்று உள்ளார். நீண்ட நேரமாக இரத்த கசிவோடு சூட்கேஸ் இருப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர், துரைப்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்து வந்த துரைப்பாக்கம் காவல்துறையினர், உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதோடு மட்டுமல்லாமல், பார்த்தசாரதி நகர் குடியிருப்பில் விசாரணை செய்ததில், பார்த்தசாரதி நகர் நான்காவது தெருவில் மணிகண்டன் வசித்து வந்த வீட்டில் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, கொலை செய்த நபர் மணிகண்டன் தான் என்பது தெரியவந்துள்ளது. இதனை எடுத்து மணிகண்டன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவரது வீட்டின் கீழ் வசித்து வந்த பொறியாளர் பரத் கூறும் பொழுது, தங்கள் வீட்டு மாடியில் இரண்டு வாரத்துக்கு முன்பு வந்ததாகவும், இரு தினங்களுக்கு இங்கே அவர் இரவு நேரங்களில் நடந்து சென்றிருந்ததாகவும், நேற்று மதியம் சூட்கேஸ் ஒன்றை வாங்கி சென்றதாகவும் அவர் கூறுகிறார். அது மட்டுமல்லாமல் வீட்டின் மீது உள்ள டேங்க் தண்ணீர் ஒரே நாளில் தீர்ந்து விட்டதாகவும் அதில், அவர்களுக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டு இருப்பதாகவும் பாரத் கூறியுள்ளார்.

பேட்டி 1
பரத்
கீழ் வீட்டில் குடியிருப்பவர்

இது குறித்து பாரத்தை சாரதி நகர் குமரன் குடியிருப்போர் நல சங்கத்தின் துணைத்தலைவர் லெனின் கூறும் பொழுது, இது போன்ற ஒரு பயங்கர கொலை சம்பவம் இந்த பகுதியில் நடந்தது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு குடியிருப்புகளிலும் புதிதாக தங்குபவர்கள் பற்றிய விவரத்தை காவல்துறையினர் சேகரிப்பதில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
தங்கள் பகுதிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் முறையாக காவல் துறையினர் பொருத்தவில்லை என்றும், பொருத்தப்பட்ட கேமராக்களும் முறையான பராமரிப்பு இல்லாமல் கிடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பேட்டி 2
லெனின்
குமரன் குடில் குடியிருப்போர் நல சங்கம்

உடல் சுகத்துக்காக மணலியில் இருந்து பெண் ஒருவரை அழைத்து வந்து இரண்டு நாள் உல்லாசமாக இருந்துவிட்டு, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அந்த பெண்ணை மூன்று துண்டுகளாக வெட்டி கூறு போட்டு உள்ள சம்பவம் சென்னையை ஒலுக்கி உள்ளது. வெட்டிய உடலை தண்ணீரில் கழுவி அப்புறப்படுத்த இருந்த நிலையில், வெளியூர் சென்ற உறவினர்கள் முன்கூட்டியே வருவதாக வந்த தகவலை எடுத்து அவசர அவசரமாக சாலை ஓரத்தில் வீசிய உள்ள சம்பவம் பேர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தீபா பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் மணிகண்டன் எங்கேயோ வீசிவிட்டு சென்று இருப்பதாகவும் அருகில் இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.