காக்கா தோப்பு பாலாஜி சென்னை பிராட்வே, பி.ஆர்.என் கார்டன் பகுதியில் பிறந்தவர்

காக்கா தோப்பு பகுதியில் ரவுடிகளாக வலம்வந்த யுவராஜ், இன்பராஜ் உடன் நட்பு

மூலகொத்தளத்தைச் சேர்ந்த ரவுடியின் அண்ணன் புஷ்பா கொலை தான் காக்கா பாலாஜிக்கு முதல் கொலை என்று கூறப்படுகிறது

யார் பெரியவன் என்ற போட்டியில் கூட்டாளி யுவராஜை கொன்ற பாலாஜி, அதன்பின் காக்கா தோப்பு பாலாஜி என்ற அடைமொழியுடன் சுற்றிவந்தார்

வடசென்னையை தன்வசம் கொண்டு வர நினைத்த காக்கா தோப்பு பாலாஜி அதற்கு தடையாக இருந்த ரவுடிகளை எல்லாம் கொலை செய்தார்

செம்மரக் கடத்தலிலும் ஈடுபட்டு வந்தார் காக்கா தோப்பு பாலாஜி

காக்கா தோப்பு பாலாஜி மீது 25 கொலை வழக்குகள், அடிதடி, மிரட்டல், ஆட்கடத்தல் என 59 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது

வியாசர்பாடி பகுதியில் சுற்றிவளைத்து என்கவுன்ட்டர்

-சென்னை காவல்துறை தகவல்