இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த கட்டமாக அம்பேத்கர் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் கலை திருவிழா நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் சென்னை சென்ட்ரல் சிட்லபாக்கம் அரிமா சங்கம் கலந்து கொண்டு விழாவில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினர். நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் அப்பள்ளியில் ஆசிரியர்களை வணங்குவதையும், பள்ளிக்கு செல்வதற்கு முன் தாய் தந்தையரை வணங்குவதையும் குறித்தும் குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார்.