தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில் 21,000 விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேரில் பார்வையிட்டார்.
விநாயகர் கண்காட்சி சிறப்பாக இருந்தாக ஆளுநர் பாராட்டினார்.
சென்னை குரோம்பேட்டை, ராதாநகரை சேர்ந்தவர் கட்டிட கலை நிபுணர் சீனிவாசன் கடந்த 17 ஆண்டுகளாக ஆயிரகணக்கான விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடத்தி வருகிறார்.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம், காந்தி தெரு, ஸ்ரீலட்சுமி ராம் கணேஷ் மகாலில் 21ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கூடிய 18 ஆம் ஆண்டு விநாயகர் கண்காட்சி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொடங்கினர்.
கண்காட்சியானது விநாயகர் சதிர்த்தி அன்று 7ந்தேதி முதல் துவங்கி செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கண்காட்சியில் பல்வேறு விநாயகர் சிலைகள் இடம் பெற்றுள்ளது.
சிப்பிக்குள் முத்து போல பிள்ளையார் முத்துலிருந்து பிறந்து வருவது போல தத்ரூபமாக இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
இருளிலும் மின்னும் ரேடியம் பிள்ளையார் திண்ணையில் படுத்து ஓய்வெடுக்கும் பிள்ளையார் சங்கு பிள்ளையார் என பல்வேறு பிள்ளையார்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.
இதில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, ஐம்பொன், இரும்பு, கண்ணாடி உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இடம் பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை இன்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பார்வையிட்டார். ஆளுநர் வருகையையொட்டி சிட்லபாக்கம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
விநாயகர் கண்காட்சியை ஏற்பாடு செய்த சீனிவாசன் ஒவ்வொரு விநாயகரின் சிறப்பம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார். இதனை கேட்டு ஆளுநர் மிகவும் சிறப்பாக கண்காட்சி இருந்ததாகவும், வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டார்.