
சேலம் மாவட்டம் வாழப்பாடி, பேளூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள விளைநிலங்களை மயில்கள் சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், மயில்களை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கும் சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாழப்பாடி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டார விவசாயிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
அப்பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக மயில்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.