சமத்துவ பெரியார் நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்புற சாலை உள்கட்டமைப்புத்
திட்ட நிதியின் கீழ் ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளை மாண்புமிகு மேயர் திருமதி வசந்தகுமாரி கமலகண்ணன்
அவர்கள் மற்றும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் மண்டலக்குழு தலைவர் திரு.து.காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.