
நான் ஏதோ ஒரு கருத்தை சொல்லியதாக அதிமுக வழக்கறிஞர் ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார். அது சம்பந்தமான எந்த விதமான சம்மனும் எனக்கு இதுவரை வரவில்லை.
எனது சென்னை அலுவலகத்திலோ அல்லது முகாம் அலுவலகத்திற்கோ வரவில்லை.
அனைத்து உதவியாளர்களிடமும் இது பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டேன்.
இருப்பினும் பத்திரிகை செய்திகளின் வாயிலாக நான் நீதிமன்ற சம்மனை மறுத்து திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்பட்டிருக்கிறது.
நான் நீதிமன்றத்தை மதிக்கக் கூடியவன் வருகிற 13ம் தேதி சம்மன் வந்தாலும் வராவிட்டாலும் நான் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவேன்.
நெல்லையில் சபாநாயகர் அப்பாவு பேட்டி