
தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து செம்பாக்கம் பேரூந்து நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சிட்லபாக்கம்-, செம்பாக்கம் பகுதி செயலாளர் மோகன், முன்னாள் அமைச்சர் டி.கே.எம் சின்னையா, முன்னாள் எம்.எல்.ஏ ப.தன்சிங், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் சேலையூர்.ஜி.சங்கர், சாந்தி புருஷோதமன், மாடம்பாக்கம் தேவேந்திரன், உள்ளிட்ட 1000க்கும் மேற்படட் அதிமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.